மேலும் அறிய
தமிழ்நாட்டில், தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகளின் பட்டியல்..
மதுரை, காந்தியடிகள் 1921, செப். 22ல் மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். அதன் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
1. புதுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி யின் மாநில செயற் குழு கூட்டம் முபாரக் தலைமையில் நடந்தது. அப்போது மாநிலத் தலைவர் முபாரக்....," தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனித்து போட்டியிடும்" என்றார்.
2. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் வைத்திருந்த வாணவேடிக்கை வெடி வெடித்ததில் கார் தீக்கரையானது. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. திசையன்விளை தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
3. மதுரை மாவட்டம் மேலூர் அழகாபுரிபட்டியைப்சேர்ந்தவர் சங்கீதா (வயது-39). இவர் மேலவளவு ஊராட்சி துணைத் தலைவியாக இருந்துவருகிறார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி கச்சிராயன்பட்டி, பரமாண்டி தோப்பு விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் யாக சாலையில் இருந்து எடுத்த சுடுசாம்பலை சேலையில் வைத்து கொண்டு டூவீலரில் மேலுார் நோக்கி சென்றார். ஹெல்மெட் அணிந்திருந்தார். சாலைக்கிபட்டி விலக்கருகே காற்றுக்கு சுடு சாம்பலில் இருந்து ஏற்பட்ட தீக்கங்கு சங்கீதா சேலையில் பட்டு தீப்பிடித்தது. இதில் காயமுற்று மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று அதிகாலை இறந்தார்.
4. மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் பகுதியில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினிசரக்கு வேனில் 2500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. மதுரை காமராஜர் ரோடு மாரியப்பன் 35, பாலமுருகன் 33, ஆகியோரை கைது செய்தனர். இதில் மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கொண்டையம்பட்டி ரேஷன் கடை விற்பனையாளர் கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
5. துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் கோயில் தசரா விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கோரி பா.ஜ.க சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் எம்.எல்.ஏ. எம். ஆர்.காந்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
6.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சட கோப ராமானுஜ ஜீயர் கருநாக பாம்பை மாலையாக அணிந்த போட்டோ வெளியாகியுள்ளது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான உத்தரபிர தேசம் நைமிசாரண்யத்தில் சடகோப ராமானுஜ ஜீயர் சாதுர்மாஸ்ய விரதத்தை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கருநாகப்பாம்பை மாலையாக அணிந்த போட்டோக்கள் வெளியாகியுள்ளன.
7. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் ராம ராஜூக்கு 66, இரண்டு ஆண் டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரையைச் சேர்ந்தவர் கதிரவன். தேவகோட்டை ஒன்றிய பா.ஜ.க பொது செயலாளர். வெளி நாட்டில் பணியாற்றி விட்டு இங்கு வந்தவர் கடந்த ஒன்றரை ஆண்டு களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை 5:40 மணிக்கு புறவழிச்சாலை யில் காவனவயல் சந்திப்பில் பாஸ்ட் புட் கடையில் பேசிக்கொண்டு இருந்த போது பைக்கில் வந்த இருவர் கதிரவனை வெட்டினர். தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கீழக்காவனவயலை சேர்ந்த இருவரை போலீ சார் தேடி வருகின்றனர்.
9. மதுரை, காந்தியடிகள் 1921, செப். 22-இல் மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். அதன் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க காந்தியடிகள் மற்றும் ராஜகோபாலாச்சாரியின் பேத்தியான தாரா காந்தி பட்டாச்சா ரியா நேற்று மதுரை வந்தார். காந்தி மியூசியத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
10. தேனியில் பாதியாக குறைந்த தென்மேற்கு பருவமழை சராசரி - வேதனையில் விவசாயிகள். “2020 ஆம் ஆண்டில் 180. 93 மில்லி மீட்டர் மழை பொழிவு இருந்த நிலையில் தற்போது 70.95 மில்லி மீட்டர் ஆக மழை பொழிவு குறைந்துள்ளது’’
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion