Kuchanur Saneeswaran Temple: தேனி: 2 ஆயிரம் வருட பழமைகொண்ட சனீஸ்வர பகவான் கோயில் : சிறப்புகள் என்ன?
தேனி, உத்தமபாளையம் அருகே குச்சனுரில் முல்லை பெரியாறும் ,சுருளியாறும் இணையும் சுரபி நதிக்கரையில் 2 ஆயிரம் வருட பழமைவாய்ந்ததாக கூறப்படும் புகழ்பெற்ற சுயம்பு லிங்க சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது.
நவகிரகங்களில் பொதுவாக சனி பகவான் என்றாலே ஒருவரை தண்டிக்கும் சனி பீடை என்றே நம்பப்படுகிறது. ஒருவருக்கு சனி பிடித்தால் பாடாய்படுத்துவார் என்றும் பல்வேறு சிரமங்களை கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இங்கு கூறப்படுவதாவது.. சனி பகவான் நல்ல யோகத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும்போது அவர் பல்வேறு வெற்றிகளை அடைவார் என்றும், நல்ல நிலைக்கு செல்வார் என்றும் இங்கு நம்பப்படுகிறது. சனிபகவான் அனைவரையும் தண்டிக்கப்படுவதில்லை என்றும் சனி திசை அல்லது ஏழரை சனியின் காலத்தில் படும் கஷ்டமானது அவரது முன் வினை கர்மாவின் அடிப்படையே கொண்டே அமைகிறது என்று கூறப்படுகிறது.
ஏழரை சனி திசை காலத்தை அல்லது சனி திசையின் காலத்தை குறைக்கும் வல்லமைகொண்ட, ஆலயமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுயம்பு சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு என்று ஒரு சுயம்பு ஆலயம் என்பது உத்தமபாளையம் அருகே உள்ள குச்சனூரில் மட்டும்தான் உள்ளது என்று கூறப்படுகிறது.
Coimbatore: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்; பசுமை வனங்களை உருவாக்கி அசத்தல்!
இந்த ஆலயமானது சுருளியாறு முல்லைப் பெரியாரும் இணைந்த கிளை நதியான சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டை ஆட்சிசெய்த தினகரன் என்ற மன்னரின் மகனான சந்திரவதனன் என்பவரால் இந்த கோயில் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது.
2 ஆயிரம் நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செண்பகநல்லூர் என்று இருந்த உரை சுயம்பு சனீஸ்வர பகவானுக்கு குச்சிப்புள்ளினால் கோவில் கட்டியதால் இது குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் அரூப வடிவ லிங்கமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு கட்டப்பட்டு உள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட வருபவர்கள் தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையும், மாலை 4 மணிமுதல் 8 மணிவரை சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இக்கோவிலில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள சனீஸ்வர பகவானை கருக்குவளைகளாலும் மண் இலைகளாலும் சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் காகத்தை வணங்கி அவருக்கு உணவிட்டு வழிபடலாம். இந்த கோவிலில் கருப்பு வஸ்திரம் சாத்தி எள்ளு பிரசாதம் வைத்தும் சனிபகவானை வழிபடலாம் எனவும் கூறப்படுகிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகளை தனித்துவத்தையும் பெற்றிருக்கும் இந்த சுயம்புலிங்க சனீஸ்வர பகவான் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.