மேலும் அறிய

Lal Salaam Teaser: கிரிக்கெட்டில் மதம்.. மொய்தீன் பாயாக தட்டிக் கேட்க வரும் ரஜினி.. ‘லால் சலாம்’ டீசர் வெளியீடு!

Lal Salaam Teaser: “விளையாட்டுல மதத்த கலந்துட்டீங்க, குழந்தைங்க மனசுல விஷத்த விதச்சிட்டீங்க” எனும் ரஜினிகாந்தின் வசனம் டீசரில் கவனமீர்த்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’ (Lal Salaam). இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என நேற்று முன் தினமே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி தற்போது டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

டீசர் வெளியீடு

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் மையக் கதாபாத்திரங்களாக இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் பாத்திரத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் மற்றும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று முடிந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

மொய்தீன் பாயாக ரஜினி

பாட்ஷா கதாபாத்திரத்துக்குப் பிறகு ரஜினி, இஸ்லாமியராக இப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில் அவரது கெட் அப் போஸ்டர் ஒன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. “விளையாட்டுல மதத்த கலந்துட்டீங்க, குழந்தைங்க மனசுல விஷத்த விதச்சிட்டீங்க” எனும் ரஜினிகாந்தின் வசனம் டீசரில் கவனமீர்த்துள்ளது. மேலும் “இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்ச நேர்ல பாருங்க” என உள்ளூர் கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து தொடங்கும் டீசர், “இது போட்டி இல்ல போர்” என்பன போன்ற வசனங்களுடன் சமகால கிரிக்கெட் நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் செய்யப்படும் மத அரசியலை மையமாக வைத்து இந்த டீசரில் காட்சிகள் அமைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த் வரும் காட்சிகள் வழக்கம்போல் மாஸ் காட்டும் வகையில் அமைந்துள்ளன. மேலும் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலரும் இந்த டீசரில் கவனமீர்த்துள்ளனர்.

முன்னதாக லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இதனை உறுதி செய்துள்ளார்.  

லால் சலாம் Vs கேப்டன் மில்லர்

“வரும் பொங்கல் அன்னைக்கு மொய்தீன் பாயா உங்கள சந்திக்கிறேன். குதா ஃபிஸ்” என ரஜினிகாந்த் தன் சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ பதிவு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு போட்டி போட உள்ளன. தவிர நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

பிரிந்த தன் கணவர் தனுஷின் திரைப்படத்துடன் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் மோத உள்ளது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
BJP TN Leader Sarathkumar?: என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
என்னது.!! நம்ம நாட்டாம பாஜக தலைவர் ஆகப்போறாரா.? அப்போ அண்ணாமலையோட கதி.?!
L Murugan:
L Murugan: "பெண்கள் சாலையில் நடக்க முடிவதில்லை" பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை -எல்.முருகன் ஆவேசம்.
Embed widget