மேலும் அறிய
Advertisement
Keezhadi Excavation: ஏப்ரல் முதல் வாரத்தில் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு தொடக்கம்
தமிழர்களின் பழம்பெருமையை வெளிப்படுத்தும் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7, 8 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 8-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. தற்போது வரை நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.
சிவகங்கையில் 8-ம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, 9 ஆம் கட்ட அகழாய்வு எப்போது தொடங்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. pic.twitter.com/rAUTFE9iys
— arunchinna (@arunreporter92) March 29, 2023
அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது தொடர்பாக சமூக வலைதள பதிவை வெளியிட்டிருந்தது வரவேற்பை பெற்றது.
கீழடி மற்றும் சுற்றவட்டாரத்தில் 8 ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, 9 ஆம் கட்ட அகழாய்வு எப்போது தொடங்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தான் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த 8 ஆம் கட்ட அகழாய்வுப்பணி நிறைவடைந்தது. அகழாய்வில் கிடைத்த பொருள்களை ஆவணப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தமிழர்களின் பழம்பெருமையை வெளிப்படுத்தும் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி: கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion