மேலும் அறிய
Advertisement
Keezhadi Excavation: கீழடிக்கு இந்தியளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தல விருது
புது தில்லியில் நடைபெற்ற World Tourism Day Celebrations நிகழ்ச்சியில் கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியனிடம் விருது வழங்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள கீழடி, இந்தியளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தள விருதிற்கு தேர்வு செய்யப்பட்டு, புது தில்லியில் நடைபெற்ற World Tourism Day Celebrations நிகழ்ச்சியின் வாயிலாக விருது வழங்கப்பட்டுள்ளது. - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல்.
உலக சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) தொடங்கப்பட்டது. சுற்றுலாவை மேம்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகத்தையும் அதன் சாராம்சங்களையும் சுற்றிப்பார்த்து அறிந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியை மக்களுக்குப் புரிய வைப்பதே இந்த நாளின் நோக்கம். இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு.
சுற்றுலாவை ஊக்குவிக்கவே இந்த தினம்
உலகெங்கும் உள்ள பல இடங்களில் உள்ள பல வகையான கலாச்சாரங்களை, பண்பாடுகலாய், மொழிகளை, அங்குள்ள மக்களை அறிந்துகொள்வது அவ்வளவு ஸ்வாரஸ்யமான விஷயம். அதுமட்டுமின்றி அவர்களது கட்டுமானங்கள், அவர்களது உருவாக்குங்கள் மேல் நமக்கு அறிவூட்டுகின்றன. சுற்றி பார்ப்பதே நம் வாழ்வை முழுமை அடைய செய்யும் ஒன்றாகும். அப்படிப்பட்ட வாழ்வில் நாம் அதனை செய்கிறோமா என்றால் பலரும் இல்லை. பெரும்பாலானோர் அவர்களால் முடிந்த, அருகில் உள்ள இடங்களுக்காவது சென்று விடுகின்றனர். ஆனால் பலர் வேலை, வேலை என்று வேலையில் கவனம் செலுத்தி, வாழ்வதையும் பார்த்திருக்கிறோம். எனவே சுற்றுலா செல்லுங்கள், என்பதை ஊக்குவிக்கவே உலக சுற்றுலா தினம் என்று ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கீழடிக்கு, இந்தியளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தல விருது வழங்கப்பட்டுள்ளது!

வரலாறு பேசும் கீழடி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில்..,” தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்கள் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வரும் நமது சிவகங்கை மாவட்டத்தில் நமது சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் மற்றும் இளைய, எதிர்கால சந்ததியினர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழாய்வுப் பணிகளும் 10ஆம் கட்டமாக கீழடிப் பகுதியில் நடைபெற்று வருகிறது. அவ்வாறாக நடைபெற்ற அகழாய்வு பணிகளின் போது, கிடைக்கப்பெற்றுள்ள, நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதன் பெருமையை உலகளவில் பறைசாற்றுகின்ற வகையிலும், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ்வைப்பகக் கட்டிடம் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 05.03.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்தியளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தலமாக கீழடி தேர்வு
தமிழர்களின் வாழ்வியல் தொன்மையையும், நாகரிகரிகத்துடன் வாழந்தமைக்கான சான்றுகளும் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெறும் தொல் பொருட்கள் வாயிலாக அறியப்படுகிறது. இச்சூழலில் ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் 8 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தேர்வுகளின் படி, கீழடியில் பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கிராம திருவிழாக்கள், அருங்காட்சியகம் மற்றும் அகழாய்வு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பம்சங்களின் அடிப்படையில், இந்தியளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தலமாக கீழடி தேர்வு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமைக்குரிய ஒன்றாகும். இந்தியளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத்தல விருதினை, நேற்றைய தினம் (27.09.2024) புது தில்லியில் நடைபெற்ற World Tourism Day Celebrations நிகழ்ச்சியில் கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது”. என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion