மேலும் அறிய
Advertisement
கார்த்திகை தீப உற்சவ விழா - வரும் 14ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்
’’இந்நிலையில் 19 ஆம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது’’
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதன் வேலை நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் விறு,விறுப்பாக நடைபெற்று, கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில், கார்த்திகை உற்சவ விழா இம்மாதம் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சுவாமியும், அம்மனும் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் வலம் வர உள்ளனர். இந்நிலையில் 19 ஆம் தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
இதில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்ற உள்ளனர். தொடர்ந்து சித்திரை வீதியில் இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும், உபய தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேங்கள் எதுவும் நடைபெறாது என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion