மேலும் அறிய

செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்... தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்

சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அரசியல் கட்சிகள், ஒரு கட்சியில் இருந்து  நிர்வாகிகளை இழுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த கட்டமாக பாஜகவா.? திமுகவா.? எந்த கட்சியில் செங்கோட்டையன் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.

செங்கோட்டையனை தட்டி தூக்கிய விஜய்

நேற்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், மாலை தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைவது குறித்தும், தவெகவில் தனக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பாகவும் ஆலோசித்தார். இதனையடுத்து இன்று காலை பனையூரில் நடைபெறும் விழாவில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொள்ளவுள்ளார் செங்கோட்டையன். அப்போது மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஈரோடு கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செங்கோட்டையனின் ஆதரவு நிர்வாகிகளும் தவெகவில் இணையவுள்ளனர்.

தவெகவில் இன்று இணையும் செங்கோட்டையன்

இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் அதிமுக மாஜி நிர்வாகிகளும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக அதிக ஆண்டுகள் இருந்தவர் சாமிநாதனும் தவெகவில் இன்று இணையவுள்ளார். புதுச்சேரியில் நியமன எம்எல்ஏவாகவும் இருந்து வந்த சாமிநாதன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி தனி அமைப்பை உருவாக்கி வரும் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரும் இ விஜய்யின் தவெகவில் இன்று இணைகிறார். மேலும் காரைக்காலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனாவும் இன்று தவெகவில் இணையவுள்ளார். அடுத்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
தவெகவுடன் கூட்டணி.. திமுகவுடன் பேச்சுவார்த்தை - எடப்பாடி மீது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பாய்ச்சல்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget