மேலும் அறிய
செம்பனூரில் கார்த்திகை தீப திருவிழா: மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த 55 ஜோடி மாடுகள்!
செம்பனூர் – மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் செல்வதை பார்த்து பார்வையாளர்கள் உற்சாகமாகக் களித்தனர்.

மாட்டுவண்டி பந்தையம்
Source : whatsapp
செம்பனூரில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி எல்லை பந்தயம்: 55 ஜோடி மாடுகள் பங்கேற்பு.
மாட்டுவண்டி பந்தையம்
சிவகங்கை அருகே உள்ள செம்பனூர் பகுதியில், ஸ்ரீ காசி வல்லநாட்டுக் கருப்பர் பாலாபிஷேக கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தையத்திற்கு சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 55 ஜோடி மாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. பெரிய மாட்டு பிரிவில் 7 கி.மீ. பந்தய எல்லை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 14 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சிறிய மாட்டு பிரிவில் 5 கி.மீ. தூரப்பந்தையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 41 ஜோடி மாடுகள் தங்கள் வேகத்தையும் திறமையையும் வெளிப்படுத்தின.
ரொக்கப் பரிசும் கோப்பையும் விழா ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கப்பட்டது.
செம்பனூர் – மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் செல்வதை பார்த்து பார்வையாளர்கள் உற்சாகமாகக் களித்தனர். செம்பனூர், புதுக்குடி, வெங்கட்ராமபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்தனர். போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசும் கோப்பையும் விழா ஏற்பாட்டுக் குழுவினரால் வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















