சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் தொடர்பான வழக்கு - விசாரணையை ஜூன் 27-ம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
இரு தரப்பும் அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை , ஜூன் 27-ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையை ஜூன் 27-ஆம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ஆம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் , கடந்த ஆண்டு, ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 2 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் , மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு, மேலும் 4 மாத கால , கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பும் அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை , ஜூன் 27-ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்