உயிரிழந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஜெயம் ரவி !
ஜெயம்ரவி ரசிகர் மன்ற தலைவர் உயிரிழந்த நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ஜெயம் ரவி. மறைந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு 5லட்சம் டெபாசிட்டும், குழந்தைகளின் கல்விசெல்வை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.

ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ்திரையுலகத்திற்கு அறிமுகமாகிய நடிகர் ஜெயம்ரவி , எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பேராண்மை, டிக் டிக் போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி திரைப்பட நட்சத்திரமாக நடித்து வருகிறார். இதனையடுத்து நடிகர் ஜெயம்ரவிக்கு தமிழகம் முழுவதிலும் பல்வேறு ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகராக இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு நேரடியாக சென்ற ரவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரவி, அவர்களது உடன்பிறந்தவர்களின் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார் pic.twitter.com/ADDjm8OLu1
— Arunchinna (@iamarunchinna) June 14, 2022
























