Jallikattu 2024: ஜல்லிக்கட்டு போட்டியின்போது சாதிகளை கூறி காளைகளை அவிழ்க்ககூடாது - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் ரப்பர் குப்பி பொறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கு ரப்பர்குப்பி பொறுத்த வேண்டும் , போட்டியின் போது சாதிகளை கூறி காளைகளை அவிழ்க்ககூடாது என கால்நடைத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரை குறிப்பிட்டு காளைகளை அவருக்கு கூடாது என கமிட்டியினரிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி பொறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் சார்பில் குப்பி பொறுத்துவதற்கு கூறியுள்ள நிலையில் நல வாரிய உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும், எனவே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகளில் காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி பொறுத்த கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொறுத்துவதற்கு காளை உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் ரப்பர் குப்பி பொறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!