மேலும் அறிய

இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு; கட் ஆப் மதிப்பெண் மறைக்கப்படுவதன் நோக்கம் என்ன? - மதுரை எம்.பி கேள்வி

மாநில மற்றும் சமூகப் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். - சு.வெங்கடேசன் கோரிக்கை.

இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு...,” பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் 300 உள்ளூர் மட்டத்திலான அலுவலர்கள் (Local Bank Officers) பணி நியமனத்திற்கான அறிவிக்கை ஆகஸ்டு 31, 2024 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 9, 2024 இருந்தது. அக்டோபர் 10, 2024 அன்று ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் அடுத்த கட்டத்திற்கு 1,305 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் நவம்பர் 27, 2024 அன்று வெளியானது. ஒவ்வொரு தேர்விலும் எவ்வளவு மதிப்பெண் வரையில் எடுக்கப்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். தற்போது வங்கிப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஐபிபிஎஸ்(Indian Banking Personnel Selection) என்ற அமைப்பு ஒவ்வொரு முறையும் "கட்-ஆஃப்" மதிப்பெண்களை வெளியிட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களைத் தேர்வு செய்யும் தேர்வாணையங்களும், முடிவுகள் வெளியாகையில் மதிப்பெண்களையும், எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்வாகியுள்ளார்கள் என்பதையும் வெளியிடுகின்றன. ஆனால், பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள இந்த முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்ச மதிப்பெண்கள் வெளியாகவில்லை. 
 
இட ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானதாகும்

அறிவிக்கையில், "தேர்வர்கள் ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு விண்ணப்பிக்கும் தேர்வர், பிற மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியிழந்தவராவார். மதிப்பெண் அடிப்படையிலான தகுதிப்பட்டியல் மாநில வாரியாக மற்றும் பிரிவு வாரியாகத் தயாரிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவுகளில் மாநில வாரியான மற்றும் பிரிவு வாரியான மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இல்லாமல் தகுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில், இதுபோன்ற பிரச்னைகள் எழுந்தபோதெல்லாம் இட ஒதுக்கீடுகளில் தவறுகள் செய்யப்பட்டிருந்தன. இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் அந்தப் பிரிவினருக்கான இடங்களைத் தராமல் இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல மதிப்பெண்கள் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப்பிரிவில் சேர்க்கப்படாமல் இடஒதுக்கீட்டுப் பிரிவுப் பணியிடங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இது இட ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானதாகும். சமூக நீதிக்காகப் போராடும் அமைப்புகள் தலையிட்டதால் அந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டன. ஆனால் தேர்வு நடைமுறையில் அது போன்ற பிரச்சனை மீண்டும் வந்துள்ளது.
 
மதிப்பெண்கள் வழங்குவது அவசியமாகும்

தேர்வின் அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியல் இந்தியன் வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்களின் சமூகப் பிரிவு என்ன என்பது அதில் குறிப்பிடாததால், அந்தப் பட்டியல் முழுமையானதாக இல்லை. சமூகங்களைக் குறிப்பிட்டு பட்டியல் வெளியிடப்பட வேண்டும். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களும் தரப்படவில்லை. குறைந்தபட்சம், முதல் கட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண்களையாவது தந்திருக்க வேண்டும். அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களுக்கு, அந்தக் கட்டம் நிறைவு பெற்ற பிறகு மதிப்பெண்கள் வழங்குவது அவசியமாகும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியூட்டுகிறது. பொதுவாக,  எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் 1:10 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இங்கு 1,305 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதாச்சாரம் கூட, மாநில வாரியாக மற்றும் சமூகப் பிரிவு வாரியாக இருக்க வேண்டும். இது தீவிரமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தேர்வு நடைமுறையைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இது போன்ற பணியிடங்களுக்கு(Officers) முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நல்ல, திறமையுள்ள தேர்வர்களைக் கண்டறிய அந்த நடைமுறை உதவுகிறது.
 
இதனால், 
1. மாநில மற்றும் சமூகப் பிரிவு வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
 
2. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் விகிதாச்சாரத்தை பரிசீலிக்க வேண்டும்.
 
3. தகுதிப் பட்டியலில் அவரவர் பெயர்களுக்கு எதிரில் சமூகப் பிரிவைக் குறிப்பிட வேண்டும்.
 
4. அனைத்துத் தேர்வர்களுக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை வழங்குதல் அவசியம்.
 
5. ஒட்டுமொத்தத் தேர்வு முறையைப் பரிசீலிக்கத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்குறிப்பிட்டவைகளை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்தியன் வங்கி சேர்மன் அகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
எனக்கு 90, உனக்கு 25 - 65 வயது தான் வித்தியாசம்.. நடுவானில் நடந்த திருமணம் - இணையத்தில் வைரலாகும் க்ளிக்ஸ்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.1 லட்சம் கடந்த தங்கம், இண்டிகோ வவுச்சர்கள், பொதுமக்களுக்கு அனுமதி - 11 மணி வரை இன்று
Hyundai Creta Vs TATA Nexon: டாடா நெக்ஸானை தட்டித் தூக்கி நம்பர் 1 இடத்தை பிடித்த ஹூண்டாய் க்ரெட்டா; எப்படி தெரியுமா.?
டாடா நெக்ஸானை தட்டித் தூக்கி நம்பர் 1 இடத்தை பிடித்த ஹூண்டாய் க்ரெட்டா; எப்படி தெரியுமா.?
China America Venezuela: “சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
“சர்வதேச சட்டத்த மீறாதீங்க“; அமெரிக்காவிற்கு சீனா கடும் கண்டனம் - எதற்காகன்னு தெரியுமா.?
Tamilnadu Roundup: அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
அதிமுகவிடம் பாஜக டிமாண்ட், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை, வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Embed widget