மேலும் அறிய

நியோமேக்ஸ் மோசடி வழக்கு; பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை - நீதிபதி

நியோமேக்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், அவற்றின் மதிப்பு எவ்வளவு? , இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய சொத்துக்கள் என்ன ?  வழக்கின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு.

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத  வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான  வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Neomax financial scam directors Company directors remanded till Sept 29 TNN நியோமேக்ஸ் நிதி மோசடி  வழக்கில் நிறுவன இயக்குநர்களுக்கு செப்., 29 வரை நீதிமன்ற காவல்
 
இந்நிலையில் தஞ்சாவூர் கவுதமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு...,”நியோமேக்ஸ் நிதி நிறுவனம்  பல்வேறு  பெயர்களில் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பல மடங்கு வட்டி தருவதாக கூறி செயல் பட்டது. ஆனால் முதலீடு செய்த மக்களுக்கு பணம் திரும்ப கொடுக்காமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது இது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் புகார் கொடுத்தனர் இந்த  வழக்கில், நிறுவனத்தின் இயக்குநர்கள், ஏஜெண்ட்டுகள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகள் பலர் உடனடியாக ஜாமினில் வெளி வந்துள்ளனர். அதிக வட்டி லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி என்னை இதில்  1 கோடி ரூபாய் 
முதலீடு செய்ய வைத்தனர். முதலீடு செய்த நிலையில், கூறியபடி வட்டி இலாபம் , நிலமோ வழங்கவில்லை. முதலீட்டாளர்களின் பணத்தை கல்லூரிகள் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. தற்போது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்களோடு, வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலர், உறுதுணையாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது.
 
நியோமேக்ஸ் மோசடி வழக்கு; பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை - நீதிபதி
 
மேலும்,  முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதில், காலதாமதம் செய்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகிகள் வீரசக்தி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யபட்டுள்ளனர் இதுவரை  25 கோடிக்கு மேல் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது மேலும் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி..,”நிதி நிறுவன நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடை பெற்றுள்ளது இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பரிவு காவல்துறை விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை. நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இன்னும் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?தற்போது வரை என்ன  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முக்கிய  நபர்கள் யார்?  நியோமேக்ஸ்  நிதி நிறுவன கிளை நிறுவனங்களின் முழு விவரங்கள், அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்?  நியோமேக்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், அவற்றின் மதிப்பு எவ்வளவு, இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய சொத்துக்களின் விவரங்கள் மேலும் தற்போதுவரை புகார் அளித்தவர்களின் விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget