மேலும் அறிய

கல்வி மாவட்டங்கள் ரத்து - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்

அரசியல் காழ்புணர்ச்சி  காரணமாக அ.தி.மு.க., சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி , திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதை மீண்டும் செயல்பட வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர் ஆர.பி.உதயகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  அமர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “சாமானிய மக்களுக்காக கல்வியில் வளர்ச்சி காணும் வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கடந்த 2018 ஆம் ஆண்டு புதிய 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கினார்.  இதில் திருமங்கலமும் அடக்கம் ஆகும் 

கல்வி மாவட்டங்கள் ரத்து - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்
 
இந்த புதிய கல்வி மாவட்டங்கள் உருவானதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியுடன் 14 சீருடைகள், மாணவர்களின் ஆசிரியர்கள் குறைகளை எளிதில் பெற்று நிர்வாக வசதி எளிமை பெறும் அது மட்டுமல்லாது இது போன்ற கல்வி மாவட்டங்களில் உருவாக்கியது மூலம் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகமானது. மேலும் தமிழ் முழுவதும்  80 பள்ளிகளை மாதிரி பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன .இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தற்போது தமிழக அரசின் சார்பில் 151 அரசாணை வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் அரசியல் காழ்புணர்ச்சி  காரணமாக அ.தி.மு.க., சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயலாகும் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது

கல்வி மாவட்டங்கள் ரத்து - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்
 
ஏற்கனவே குடிமராமத் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கண்ணி திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், அம்மா பரிசு பெட்டகம் ஆகியவற்றை நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியார்  52 கல்வி மாவட்டங்களை உருவாக்கி சீர்திருத்த புரட்சி செய்த கல்வி மாவட்டங்களை ரத்து செய்துள்ளனர். யாரிடம் கருத்து கேட்காமல் சர்வாதிகாரபோக்குடன்  அரசு செய்துள்ளது. ஆகவே இதை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். மீண்டும் உசிலம்பட்டி திருமங்கலம் கல்வி மாவட்டங்களாக்க செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், நிர்வாகிகள் இளங்கோவன், சுதாகரன், வெற்றிவேல், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், தனராஜன், ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, காசிமாயன், திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget