விஜய்யின் தவெக-வில் இணையும் முக்கிய அரசியல் தலைவர்கள்! செங்கோட்டையன் உட்பட மாஸ் என்ட்ரி! பரபரப்பு தகவல்!
செய்தியாளர்கள் சந்திப்பில் 55 ஆண்டுகாலம் கட்சியில் உழைத்தவனை நீக்கி உள்ளதாக செங்கோட்டையன் மன உளைச்சலுடன் பேசினார் - டிடிவி தினகரன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது அரசியல் கட்சிகள், ஒரு கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அடுத்த கட்டமாக பாஜகவா.? திமுகவா.? எந்த கட்சியில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைய இருப்பது அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.

நேற்று காலை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், மாலை தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைவது குறித்தும், தவெகவில் தனக்கு வழங்கப்படவுள்ள பதவி தொடர்பாகவும் ஆலோசித்தார். இதனையடுத்து இன்று காலை பனையூரில் நடைபெறும் விழாவில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொள்ளவுள்ளார் செங்கோட்டையன். அப்போது மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல ஈரோடு கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செங்கோட்டையனின் ஆதரவு நிர்வாகிகளும் தவெகவில் இணையவுள்ளனர்.
இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் அதிமுக மாஜி நிர்வாகிகளும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக அதிக ஆண்டுகள் இருந்தவர் சாமிநாதனும் தவெகவில் இணையவுள்ளார். புதுச்சேரியில் நியமன எம்எல்ஏவாகவும் இருந்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி தனி அமைப்பை உருவாக்கி வரும் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வந்தார். அவரையும் விஜய்யின் தவெகவில் இன்று இணைகிறார். மேலும் காரைக்காலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனாவும் இன்று தவெகவில் இணையவுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்த கருத்துக்கள் விமர்சனங்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெவித்து வரும் நிலையில், இன்று திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், ஒட்டன்சத்திரம் அமமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

தவெக தலைவர் விஜய் உடன் செங்கோட்டையன் சந்திப்பு குறித்த கேள்விக்கு. நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் 55 ஆண்டுகாலம் கட்சியில் உழைத்தவனை நீக்கி உள்ளதாக செங்கோட்டையன் மன உளைச்சலுடன் பேசினார். விஜய் உடனான சந்திப்பை அரசியலாக அனைவரும் பார்க்கிறார்கள். பசும்பொன் - க்கு எங்களுடன் அவர் விருந்தாளியாகவே வந்தார். அதிமுகவில் எத்தனை உயர்வு தாழ்வுகள் வந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் இயக்கத்திற்கு வந்தபோது எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் ஆதரவாக இருந்தார்,அனைவரும் விஜய் உடனான சந்திப்பை அரசியலாக பார்க்கிறீர்கள். நான் அவரைப்பற்றி கவனமாக பேச வேண்டும் என நினைக்கிறேன்.1989 தேர்தலில் ஜெயலலிதா அவர்களுடன் இணைந்து பம்பரம் போல் செயல்பட்டவர் செங்கோட்டையன்.
செங்கோட்டையனை பைலட் (Pilot) என பேசினார்கள். அவர் சிறந்த நிர்வாகி.இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராக வந்தவர் செங்கோட்டையன்.செங்கோட்டையன் என்ன பேசுகிறார் என்பதை பார்த்துவிட்டு பதில் சொல்வது தான் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.தவெக இணைப்பு குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளிக்கவில்லை என்ற கேள்விக்கு தவெக இணைப்புக்கு ஆமாம் என்றும் செங்கோட்டையன் பதிலளிக்கவில்லை.





















