மேலும் அறிய
Advertisement
தென் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!
மதுரை – திருப்பதிக்கு நவம்பர் 19 முதல் தினமும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
1. சிவகங்கை அருகே 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரியாறு பாசன நீர் திறக்கப்பட்டதையொட்டி 3 கி.மீ. கால் வாயை தாமாகவே முன்வந்து கிராம மக்கள் சுத்தம் செய்தனர்.
2. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டாரத்தில் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க 45 லட்சம் ஒதுக்கீடு
3. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
4. மதுரை – திருப்பதிக்கு நவம்பர் 19 முதல் தினமும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மதியம் 3:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு திருப்பதி சென்றடையும். 4:40 மணிக்கு புறப்பட்டு மாலை 6:40 மணிக்கு மதுரை வந்தடை யும். மதுரையில் இருந்து திருப்பதிக்கு 3500 கட்டணம் வசூலிக்கப்படும் என நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
5. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும் பொன்கிராமத்தில் அக்டோபர் 28, 29, 30ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறும் நிலையில் பொது மக்களுக்கு அனுமதியில்லை என ஆட்சியர் காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளார்.
6. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் மனைவி கற்பகம், மகள் தர்ஷினி உணவகத்தில் அசைவ உணவு வாங்கி சாப்பிட்ட பின்னர் குளிர்பானம் அருந்திய உடன் உயிரிழந்த நிலையி ல்குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை.
7. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சியில் 42 பேரின் பட்டாக்களை ரத்து செய்து 56 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீண்டும் அரசு நிலமாக ஆட்சியர் முரளீதரன் பதிவு செய்தார்.
8. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டியில் எம்.இ., முதலாண்டு படிக்கும் 22 வயது மாணவி சாருகலா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சிவந்தி பட்டியில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
9. திருமங்கலம் அருகே வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோயிலில் புரட்டாசி பொங்கலை யொட்டி நேர்த்திக்கடனாக சிலைகள் எடுக்கும் திருவிழா நடந்தது.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74902-ஆக உயர்ந்துள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion