மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய செய்திகள்..
சுருளி அருவிக்கு செல்லும் போது நாராயணன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
1. நெல்லை மாவட்டத்தில் இரவு 4 மணி நேரத்திற்கும் மேல் கொட்டி தீர்த்த மழையால் கோயில், வீடுகள், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் மழை நீர் புகுந்தது, தொடர் மழை காரணமாக நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு.
2. நெல்லை வள்ளியூர் கோட்டையடி தெருவில் கடைக்கு சென்ற பெண்ணிடம் இரண்டு சக்கரத்தில் வந்த 2 மர்ம நபர்கள் 5 பவுண் தங்க செயினை பறித்து சென்றனர். அந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
3. சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கி கார்த்திகை 1-ஆம் தேதி சுருளி அருவிக்கு செல்லும் போது நாராயணன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
4. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயிலுக்கு சொந்தமான குளங்களை தூர்வாரி அதனைப் புதுப்பித்து அதன் இயல்பு நிலைக்கு கொண்டுவர கோரிய மனு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
5. வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
6. ராமேஸ்வரம், பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தில் தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடையும்வரை தூக்குப்பாலத்தை கப்பல்கள் மற்றும் பெரிய மீன்பிடி விசைப் படகுகளும் கடந்துசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
7. தூத்துக்குடியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28,400 லிட்டர் டீசலை குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
8. சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே கீழப்பட்டமங்கலம் ஊராட்சி தெற்கு நைனார்பட்டி, ஊடேந்தல்பட்டி, சாத்தனேந்தல் உள்ளிட்ட 6 கிராம மக்கள் அனைத்து தேவைகளுக்கும் பெருச்சிகோவில், கண்டரமாணிக்கம் சென்று வருகின்றனர், மாணவர்களும் பெருச்சிகோவில், கண்டரமாணிக்கம் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். இந்நிலையில் பெருச்சிகோயில் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தெற்கு நைனார்பட்டி, ஊடேந்தல்பட்டி, சாத்தனேந்தல் உள்ளிட்ட 6 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பாலத்தில் இடுப் பளவு தண்ணீர் செல்வதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
9. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூடிக் கிடந்ததை கண்டித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
10. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வழக்கறிஞர் கூலிப்படையினர் வெட்டி படுகொலை பழிக்குப் பழியாக நடந்ததாக போலீஸாரின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion