மேலும் அறிய

Madurai Hc: பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு !

பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர்- மதுரைக்கிளை

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பாஸ்போர் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

சுரேஷ் குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "2013ம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது போலீஸார் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜென்ட் மட்டுமே. அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

Madurai Hc: பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு !

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரர் மீது எவ்வித குற்றமும் இல்லை என ஒரு கியூ பிரிவு காவல்துறையினர் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. மனுதாரருக்கான நிவாரணம் வழங்கப்பட்டாலும், 2019ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலரும், இந்தியாவைச் சேர்ந்த சிலரும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகள் பெற்ற வழக்கு தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டது. இது தொடர்பாக கியூ பிரிவினர் தரப்பில் காவல்துறை அலுவலர்கள் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி உட்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Madurai Hc: பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு !

இந்த வழக்கு தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் கியூ பிரிவு காவல்துறையினர் 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதி ஆனதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடப்படுகிறது.

Madurai Hc: பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு உயர்நீதிமன்ற கிளை பாராட்டு !

அதேசமயம் பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக  மீண்டும் பேசிய பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுவது. அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!

என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை

MGR Vaali: எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!

இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்

ABP Premium

வீடியோ

BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக
13 year boy austin |குடும்பத்தை காப்பாற்ற கடலில்குதித்த 13 வயது சிறுவன் ஆஸ்டின் நெகிழ்ச்சி பேட்டி
EV Velu Inspection |’’ஸ்டாலின் ஐயா வர்றாருஎல்லாம் கரெக்டா இருக்கணும்’’எ.வ.வேலு திடீர் INSPECTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
Sasikala TVK: இபிஎஸ் கூடவே கூட்டணியா? சசிகலா போடும் புது ப்ளான் - தயாராகும் தவெக!
என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை
என்னது 2 லட்சமா! ஐடி வேலையை விட அதிக சம்பளம்... ஷாக் தந்த இஸ்திரி கடை
MGR Vaali: எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!
MGR Vaali: எம்ஜிஆருக்கு பாட்டு எழுதியதால்தான் பிரபலம் ஆனேனா? வாலி சொன்ன பதில் இதுதான்!
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார் லீமாரோஸ் மார்ட்டின் - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்
INDIAN CRICKET: பெங்களூரில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்! இளம் வீரர்களை உருவாக்கும் பிசிசிஐ திட்டம்!

அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நீக்கம்: 15 ஆண்டு உழைப்புக்கு விடிவு இல்லையா? நியமனத்தில் சதி! ஆசான்கள் வேதனை

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்: குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு குழப்பம்! புதிய தேதிகள் அறிவிப்பு!

”பெண்கள் பாதுகாப்பு வெறும் விளம்பரம்” - திமுக மீது நடிகை கஸ்தூரி கடும் தாக்கு...

Embed widget