மேலும் அறிய
Advertisement
Madurai HC: குட்கா புகையிலை விற்றவருக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன் - உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
அதை மீறி வேறு வழக்குகள் பதியப்பட்டல் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீன் ரத்தாகிவிடும் எனவும் நூதன நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை வழக்கில் கைதானவர் ஜாமீன் கோரி மனு தாக்கல். குட்கா புகையிலை விற்றவருக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இனி விற்க மாட்டேன் என பிரமாண உறுதிமொழி பத்திரம் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ள நீதிபதி உத்தரவு. ஒருவேளை மனுதாரர் மீண்டும் இதே போல் குற்ற செயலில் ஈடுபட்டால் வழங்கப்பட்டுள்ள ஜாமீன் தானாக ரத்து ஆகிவிடும் என்றும் நீதிபதி உத்தரவு.
குட்கா புகையிலை விற்றவருக்கு நூதன நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை இனி விற்க மாட்டேன் என பிரமாண உறுதிமொழி பத்திரம் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ள நீதிபதி உத்தரவு pic.twitter.com/uZx2VyzYbg
— arunchinna (@arunreporter92) September 8, 2023
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார், சட்ட விரோதமாக குட்கா புகையிலை விற்றதாக கூறி விருதுநகர் கிழக்கு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஏற்கனவே இது போல பல வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மனுதாரர் கோரிக்கை ஏற்று, ஜாமீன் வழங்குவதாகவும். மேலும் கீழமை நீதிமன்றத்தில் "இனிமேல் புகையிலை விற்க மாட்டேன்" என உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் எனவும். அதை மீறி வேறு வழக்குகள் பதியப்பட்டல் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமின் ரத்தாகிவிடும் எனவும் நூதன நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என சொல்லும் திமுகவை ஒழிக்க வேண்டும்” - அண்ணாமலை காட்டம்
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டி: இளைஞர்கள் உற்சாகம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion