மேலும் அறிய
Advertisement
எந்த சவாலையும் சமாளிக்க அரசு தயார் - பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
10 வருடமாக ஆட்சியில் இருந்த அதிமுக மழைநீர் தேங்காமல் இருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக தண்ணீர் அகற்றப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சென்னை, டெல்டா பகுதிகளில் கொட்டி தீர்த்தது என்றும் இதுவரை இல்லாத அளவு தென் மாவட்டங்களில் நேற்று மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவில் கன மழை பெய்துள்ளது. இது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக இருக்கும் என கூறினார்.
24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாவடங்களில் உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார். மேலும், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேத விவரங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மாஞ்சோலை பகுதியில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணை நிரம்பியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இருக்க கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 109 முகாம்களில் 9903 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில்14 முகாம்களில் 639 பேர் தங்கவைக்க பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
வீடுகளை காலிசெய்து முகாம்களில் உள்ளவர்களின் வீடுகளுக்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு கொடுக்க பட்டுள்ளது. மத்திய அரசிடம் இரண்டு தவனைகளாக மொத்தம் 4626.80 கோடி கேட்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் உள்ள தரை பாலங்களை கணக்கிட்டு வருகிறோம். ஏரி குளங்கள், கண்மாய்கள், கரைகள் வலுவாகவே உள்ளது.நீர்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
10 வருடமாக ஆட்சியில் இருந்த அதிமுக மழைநீர் தேங்காமல் இருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக தண்ணீர் அகற்றப்படுகிறது. மழையால் தமிழகத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழையின் காரணமாக சாலை போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வேளாண் பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்வதிலும் பிரச்னை இல்லை என விளக்கமளித்தார். தென் மாவட்டங்களில் தற்போது எந்த சவாலும் இல்லை, சவாலை சமாளிக்க அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார். தூத்துக்குடியில் 14 நிவாரண முகாம்களில் 639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார். வேலூரில் 35 முகாம்களில் 3916 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion