மேலும் அறிய

பல்லாயிரம் கிலோ ரேஷன் பொருட்கள் கடத்தல்: குற்றவாளி மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு !

மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரிலும்  கள்ளசந்தைக்காரர் என்ற அடிப்படையில் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரையில் பல்வேறு ரேசன் பொருட்கள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கதிர்வேலு என்பவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ரேஷன் அட்டை

தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும்.

குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பல்லாயிரம் கிலோ ரேஷன் பொருட்கள் கடத்தல்: குற்றவாளி மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு !
குற்றவாளி சிறையில் அடைப்பு

மதுரை மாநகர் மேல அனுப்பானடி TNHB காலனி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (43). இவர் கடந்த 11ஆம் தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து, கள்ளச்சந்தையில் சுமார் 16ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

இதனிடையே கதிர்வேலின் குற்ற சரித்திர பதிவேடு குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பில் கதிர்வேல் மீது ஏற்கனவே சுமார் 7750 கிலோ ரேசன் கோதுமை கடத்தல் வழக்கு மற்றும் சுமார் 51ஆயிரத்து 300 கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்கு மற்றும் 2660 கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கதிர்வேலு சார்ந்த கள்ளச்சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை பரிந்துரையின்படியும் மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரிலும்  மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்லாயிரம் கிலோ ரேஷன் பொருட்கள் கடத்தல்: குற்றவாளி மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு !

தமிழக அரசு ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை  முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர்.

இவர்கள் பற்றியும் ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் ரகசியம் காக்கப்படும். இதற்காக மாநில சிவில் சப்ளை சிஐடி போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  இது சென்னையில் இயங்கும் கூடுதல் டிஜிபி-ன் நேரடி கண்காணிப்பில்  செயல்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Embed widget