மேலும் அறிய

Madurai: பா.ஜ.க., மாவட்ட செயலாளர் கொலை: கைதான 5 பேரில் 3 பேருக்கு கால் உடைந்து மாவுக்கட்டு!

சக்திவேலிடம் பணிபுரியும் பணியாளர்களாலேயே சக்திவேலை பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் சக்திவேல்  கொலை வழக்கில் 5 பேர் கைது - இதில் 3 பேர் தப்பியோட முயன்றபோது கல்குவாரி பள்ளத்தில் விழுந்ததில் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதி.
 
ராமநாதபுரம் கமுதியை அடுத்த கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் கருப்பாயூரணி  குறிஞ்சி ரெசிடென்சி பகுதியில் வசித்துவருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக ஓ.பி.சி., அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை  சக்திவேல் தனது வீட்டில் இருந்து யாகப்பா நகரில் உள்ள தனது அரிசி அரவை மில்லுக்கு சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சக்திவேலின் மனைவி முத்துவேல் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

Madurai: பா.ஜ.க., மாவட்ட செயலாளர் கொலை: கைதான 5 பேரில் 3 பேருக்கு கால் உடைந்து மாவுக்கட்டு!
 
இந்நிலையில் சக்திவேலை கொலை செய்துவிட்டு தப்பியோடி கடச்சனேந்தல் - ஒத்தக்கடை சந்திப்பு சாலையோரத்தில் பதுங்கியிருந்த மதுரை கல்மேடு எல்.கே.பி., நகரை சேர்ந்த மருதுபாண்டி (27) மற்றும் அவரது தம்பி ரஞ்சித்குமார்(24) மற்றும் அவர்களது நண்பர்களான அண்ணாநகரை சேர்ந்த தென்னரசு(21), கடச்சனேந்தலை சேர்ந்த ஆகாஷ்(27), கே.புதூரை சேர்ந்த அகிலன் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது 5 பேரிடம் கவால்துறையினர் நடத்திய விசாரணையில்  கொலையான சக்திவேலின் மில்லில் வேலை பார்த்த மருதுபாண்டி என்பவர் வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். அதனால் சக்திவேல் மருதுபாண்டியிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மேலும் கொலையுண்ட சக்திவேல், மருதுபாண்டியிடம் பணத்தை திருப்பி தரவில்லையென்றால் அவரது மனைவி முன் அடித்து அசிங்கப்படுத்திவிடுவேன் என கூறியுள்ளார். இந்த முன்விரோதத்தால் சக்திவேலை  கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Madurai: பா.ஜ.க., மாவட்ட செயலாளர் கொலை: கைதான 5 பேரில் 3 பேருக்கு கால் உடைந்து மாவுக்கட்டு!
 
இதனைத்தொடர்ந்து சக்திவேல் கொலை வழக்கில் 5 பேர்களை கைது செய்து, அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஆயுதங்களை பதுக்க வைத்திருந்த பாண்டியன் கோட்டை பிருந்தா நகர் கல்குவாரி பள்ளத்திற்கு  காவல்துறையினர் அழைத்துசென்றனர்.  அப்போது ஆயுதங்களை கைப்பற்றும் போது  அங்கிருந்த காவல்துறையினரிடம் இருந்து மருதுபாண்டி, ரஞ்சித்குமார், தென்னரசு ஆகிய 3 பேரும் கல்குவாரி பள்ளத்தில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது 3பேருக்கும் கால் எலும்பில் காயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகிலன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையில் பாஜக மாநகர் ஓ.பி.சி., அணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேருக்கு கால்முறிவு ஏற்பட்டதோடு சக்திவேலிடம் பணிபுரியும் பணியாளர்களாலயே சக்திவேலை பணத்திற்காக கொலை செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
Madurai Power Shutdown (30.07.2026) : மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
Madurai Power Shutdown (30.07.2026) : மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளிக்கு டாப்புக்கு போகுமா !
மதுரை மல்லிகை விலை ரூ.800... மேலும் உயருமா? ஆடி வெள்ளக்கு டாப்புக்கு போகுமா !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget