மேலும் அறிய
Advertisement
”மதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் நிறுவப்படும் மீன் சிலை” - சு.வெங்கடேசன் மகிழ்ச்சி !
’’மீன் சிலை மட்டுமின்றி சிலையின் வலது மற்றும் இடது பக்கமாக தலா மூன்று வண்ண நீரூற்றுகளையும் அமைக்க திட்டம்’’
மதுரை ரயில்நிலைய சந்திப்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மீன் சிலை இரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளின் காரணமாக அகற்றப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இரயில்வே சார்ந்த பணிகளை ஆய்வு செய்த பொழுது இந்தப் பிரச்னை குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கவனத்திற்கு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தகவலை அதிகாரிகள் கவனித்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி எடுத்து வைத்தார். இந்நிலையில் மீண்டும் மதுரையில் மீன் சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கட்டுமானத்தை துவக்கு பணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதுரை எம்.பி வெங்கடேசன் ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இரயில்வே சார்ந்த பணிகளை ஆய்வு செய்த பொழுது இந்த பிரச்சனை கவனத்திற்கு வந்தது, உடனே இதில் தலையீடு செய்தேன். அதில் முன்னேற்றம் காண தொடர்ந்து தலையிட்டு வந்தேன். இடையில் கோவிட் தொற்று காரணமாக எந்த வேலையும் நடைபெறவில்லை. இப்பொழுது மீண்டும் இந்த பிரச்னை சம்பந்தமாக நவம்பர் 1 ஆம் தேதி இரயில்வே கோட்ட மேலாளரை நானும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினோம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மீன் சிலையை மீண்டும் நிறுவும் பணி துவக்கப்பட்டது. மீன் சிலை மட்டுமின்றி சிலையின் வலது மற்றும் இடது பக்கமாக தலா மூன்று வண்ண நீரூற்றுகளையும் அமைக்க ஏற்பாடாகியுள்ளது. அதற்கான செலவுகளையும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை ஏற்று கொண்டுள்ளது. இன்று காலை செங்கலை எடுத்து வைத்து பணியினை துவக்கி வைத்தது பெரு மகிழ்வு. இது இரண்டரை ஆண்டு தொடர் தலையீட்டுக்கு கிடைத்த பலன். இந்நிகழ்வில் உடன் மதுரை ரயில்வே கோட்ட தலைமை பொறியாளர் வில்லியம்ஸ் ஜோய் மற்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஜெகதீசன் மற்றும் முதுநிலைத் தலைவர் இரத்தினவேல் சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் மா.கணேசன், பகுதிச்செயலாளர் தோழர் ஜீவா ஆகியோர் பங்கெடுத்தனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion