மேலும் அறிய
Advertisement
மதுரை பசுமலையில் தீ விபத்து - வட மாநில இளைஞரிடம் போலீஸ் விசாரணை
தீ விபத்தின் பாதிப்பை தடுத்த சமூக ஆர்வலர் ஸ்டாலின் மற்றும் நாட்டி நவனீத கிருஷ்ணனுக்கும் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் உள்ள பசுமலை உச்சியில் கபாலீஸ்வரி அம்மன் கோயில் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த மலைப்பகுதி 645 படிக்கட்டுகளுடன் சுமார் 1000 அடி உயரம் உள்ளது. இந்த மலையில் திடிரென தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து மலையில் இருந்த மரங்கள் மீது தீ எரிய தொடங்கி மளமளவென காய்ந்த மரங்களில் பற்ற தொடங்கியது. இதனால் தீயானது கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதால் மாடக்குளம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்த தீயை அணைத்தனர். இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மலையில் பொதுமக்கள் ஏறிச்சென்று பார்த்தபோது அங்கு பீகாரை சேர்ந்த சோட்டுகுமார் மண்டல் என்ற இளைஞர் கையில் 10க்கும் மேற்பட்ட தீப்பெட்டிகளுடன் இருந்த நிலையில் அவரை பிடித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்று திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீவிபத்தில் மலையில் வாழும் மயில், முயல் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கும் நிலையில் உள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் கண்மாய் கரை
பாதை என்பதால் சிரமத்தை காரணம் காட்டி தீயணைப்பு துறை வாகனம் அங்கு வரவில்லை. காட்டு தீ போல மெல்ல பரவிய நிலையில் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனாலும் இந்த விபத்தை மிகவும் மெத்தனமாக வனத்துறை அதிகாரிகள் அனுகியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதே போல் காவல்துறையினர் தீ பற்ற வைத்தவர் வட மாநில இளைஞர் என்பதால் புகாரை எடுத்துக் கொள்ளாமல் கை கழுவியது வேதனை அளித்தாக தெரிவித்தனர். இந்த தீ விபத்தின் பாதிப்பை தடுத்த சமூக ஆர்வலர் ஸ்டாலின் மற்றும் நாட்டி நவனீத கிருஷ்ணனுக்கும் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கணவன், மகன்களின் இழப்பு.. கடும் துயரம்.. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சொன்ன நம்பிக்கை வார்த்தைகள்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion