மேலும் அறிய
Advertisement
அந்தியோதயா விரைவு ரயிலில் டிக்கெட் சோதனை செய்த போலி டி.டி.ஆர் - எப்படி சிக்கினார்?
கைது செய்து விசாரணை நடத்திய பொழுது அந்த போலி டி.டி.ஆர் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது.
அந்தியோதயா விரைவு ரயிலில் பயணிகளிடம் பயணச்சீட்டை சோதனை செய்த போலி டி.டி.ஆர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அவரிடம் எதற்காக இப்படி செய்தார் என்பதை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ரயிலில் செக்கிங் செய்த போலி டி.டி.ஆர்.,
அந்தியோதயா அதிவிரைவு ரயில் தினசரி தாம்பரத்திலிருந்து நாகர்கோயில் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல் நேற்று இரவு 11:00 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இன்று காலை 6:10 மணியளவில் திருச்சியை அடைந்தது. அங்கு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் உடையில் ஏறிய நபர் பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து உள்ளார். அதே ரயிலில் மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவணசெல்வி என்பவரும் பயணம் செய்தார். அவர் இந்த டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபரிடம் எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்டபோது மதுரையில் பணிபுரிவதாக கூறியிருக்கிறார். நானும் மதுரையில் தான் பணிபுரிகிறேன். உங்களை பார்த்ததில்லை என்று அவரது அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்ததில் அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பதை என்பது கண்டறிந்தார்.
கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை
இதனனையடுத்து மதுரை ரயில் நிலையத்தை ரயில் அடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் போலி டிடி.ஆரை ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது அந்த போலி டி.டி.ஆர் கேரளா மாநிலம் பாலக்காடும்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் எதற்காக இப்படி செய்தார் என்பதை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Vanthe Bharat: வெற்றிகரமாக நடந்த மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்வே சோதனை ஓட்டம்!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - keezhadi excavation: கீழடியில் 10ம் கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்த முதல்வர்; அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion