மேலும் அறிய

வாழைப்பழ காமெடி தெரிஞ்ச உங்களுக்கு வாழைப்பழத்தோட வரலாறு தெரியுமா ?

இந்தியாவை தாயகமாகக் கொண்டதாக இருப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தப்படுத்தக் கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது.

வாழைப்பழங்கள் பல வகை பயன்பாடு உள்ளவையாக, பழங்காலத்தில் இருந்தே மதிப்புக்குரியவையாக இருந்து வருகின்றன. இந்தியாவை தாயகமாகக் கொண்டதாக இருப்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தப்படுத்தக் கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. வாழை மரங்கள் நாட்டின் கலாசார கட்டமைப்பில் பிணைப்பு கொண்டதாகவும் இருக்கின்றன. நாட்டு ரகங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. இதமான, ஈரப்பதமான சூழல் இருப்பதாலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் செழிப்பான மண் வளம் இருப்பதாலும் நாகர்கோவில் போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. உலகின் ஆரம்பகால பழமாக, அதிகம் பயிரிடப்படும் பழ மரமாக வாழை மரங்கள் இருக்கின்றன.
 
வாழைப்பழ காமெடி தெரிஞ்ச உங்களுக்கு வாழைப்பழத்தோட வரலாறு தெரியுமா ?
 
இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இருந்து இவை உலகின் பல பகுதிகளுக்குப் பரவியுள்ளது. இன்றைக்கு, உலகில் மிக அதிகமாக சாப்பிடப்படும் பழங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய் காலத்திலும் மக்கள் இதை நிறைய சாப்பிடுகிறார்கள். உலகம் முழுக்க கூகுள் தேடலில் வாழைப்பழ ரொட்டி எளிதாக எப்படி தயாரிப்பது என்ற தகவல்கள் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கின்றன. வாழைப்பழத்தின் ருசி பிடித்துப் போனதால் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாமன்னர் அலெக்சாண்டர் இவற்றைக் கொண்டு சென்றார் என்பதற்கு வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.

வாழைப்பழ காமெடி தெரிஞ்ச உங்களுக்கு வாழைப்பழத்தோட வரலாறு தெரியுமா ?
 
பிறகு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுப் பகுதிகளுக்கு 15வது நூற்றாண்டில் வாழைப்பழம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அங்கிருந்து பெர்முடாவுக்குச் சென்றுள்ளது.17 மற்றும் 18வது நூற்றாண்டுகளில் புதுமையான பழங்கள் என்ற வகையில் பெர்முடாவில் இருந்து கப்பல் மூலம் இங்கிலாந்துக்கு வாழைப்பழங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 1835 ஆம் ஆண்டில், டெர்பிஷயரில் உள்ள சாட்ஸ்வொர்த் எஸ்டேட்டின் தோட்ட தலைமை அலுவலர் ஜோஷப் பாக்ஸ்ட்டன் புதிதாக மஞ்சள் நிறத்தில் ஒரு வாழை ரகத்தை உருவாக்கினார். தனது முதலாளி வில்லியம் கேவன்டிஷ் நினைவாக அதற்கு முசா கேவென்டிஷி என பெயரிட்டார்.எல்லா நோய்களுக்கும் மருந்தாக வாழைப்பழம் கருதப்படுகிறது, உடல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் ஆன்மிக விஷயங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவின் தென் பகுதிகளில் நாட்டு ரகங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.
 
வாழைப்பழ காமெடி தெரிஞ்ச உங்களுக்கு வாழைப்பழத்தோட வரலாறு தெரியுமா ?
 
பூவன், மொந்தை, பேயன் பழங்கள் சத்து, மணம், ருசிக்காக மக்களால் பெரிதாகப் பேசப்படுகின்றன. இந்தியாவில் எல்லா நோய்களுக்கும் மருந்தாக வாழைப்பழம் கருதப்படுகிறது, உடல் ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் ஆன்மிக விஷயங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது. வாழைப்பழங்களில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி ஆகியவையும், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்து உள்ளன. இருந்தாலும் இந்தியாவில், பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவ குணம் உள்ளவையாக வாழைப்பழங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். வாழை மரங்கள் புனிதமாகக் கருதப்படுகின்றன. வாழை மரத்தின் எல்லா பகுதிகளையும் பயன்படுத்துகிறார்கள்.

வாழைப்பழ காமெடி தெரிஞ்ச உங்களுக்கு வாழைப்பழத்தோட வரலாறு தெரியுமா ?
 
வாழைப் பழங்களை சாப்பிடுகிறார்கள், இலை, தண்டு ஆகியவை மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வாழைப் பூ மற்றும் தண்டு ஆகியவை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. வாழைக்கன்று தொழுநோய், வலிப்பு மற்றும் பூச்சிக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகின்றன. மனநிலை பாதிப்புகளால் ஏற்படும் ரத்த அழுத்த அதிகரிப்பு, தூக்கமின்மை போன்றவற்றுக்கு தலப்போத்திச்சில் என்ற தெரப்பி அளிக்கப்படுகிறது. கருத்தரித்தல், விளைச்சல் மற்றும் செழிப்பின் அடையாளமாகவும் வாழை கருதப்படுகிறது. எனவே, தென்னிந்தியாவில், திருமணங்கள், மத வழிபாட்டு விழாக்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளின் போது வீடு அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நுழைவாயிலில் இருபுறங்களிலும், வாழைத்தார், பூ உள்ள வாழை மரங்களைக் கட்டி வைக்கிறார்கள்.
 
வாழைப்பழ காமெடி தெரிஞ்ச உங்களுக்கு வாழைப்பழத்தோட வரலாறு தெரியுமா ?
 
இந்தியாவில் பல வகைகளில் வாழைப்பழங்களை சாப்பிடுகிறார்கள். பழுத்தது அல்லது காயாக, பயனுக்கு ஏற்ப அதைத் தேர்வு செய்கிறார்கள். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் மட்டி பழம் தருகிறார்கள். பாரம்பரிய மற்றும் தற்கால இந்திய உணவு வகைகளில் நேந்திரம் மற்றும் ரஸ்தாளி ரகங்களை பயன்படுத்துகிறார்கள். அதிக நாட்களுக்கு வைத்திருக்கலாம், நீர்ச்சத்து குறைவு என்பதால் இவற்றை தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் வாழை நமது பாரம்பரியத்தோடு பின்னிப்பிணைந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget