மேலும் அறிய

Sellur Raju: "மோடி போல் எடப்பாடியாரும் பிரதமர் ஆவார்" - செல்லூர் ராஜூ சொல்லும் கணக்கு

மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா?. அதுபோல எடப்பாடி பழனிசாமியும் உயர்வார்.

மதுரை துவரிமான் கீழத்தெருவில் உள்ள சமுதாய கூடத்தின் முதல் மாடியில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜூ பேசுகையில்,

 பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டம் குறித்த கேள்விக்கு., 

இதுகுறித்து அதிகம் சொல்ல விரும்பவில்லை. இந்த கூட்டம் நடந்தது ஒரு பிரோஜனம் இல்லை. இந்த கூட்டத்தில் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.  இதில் தலைவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. உப்புக்கு சப்பான கூட்டமாக பார்க்கிறேன். ஒற்றுமை இல்லாத கூட்டணி. தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பிரதமர் வேட்பாளர் என்கின்றனர். ஆனால் அவர் திருவாய் மலரவில்லை. காங்கிரஸ் குறித்தும் ஸ்டாலின் எதுவும் சொல்லவில்லை.

செந்தில் பாலாஜி  சிகிச்சை குறித்த சந்தேகத்தை தீர்ப்பது தொடர்பாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு.,

எய்ம்ஸ், அப்போலோ உள்ளிட்ட மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்ததாக சொல்லவில்லை. காவேரி மருத்துவமனையில் செய்ததாக சொல்கின்றனர். இதனால் அவர்கள் சொல்வதில் சந்தேகம் ஏற்படுகிறது. வாக்கிங் போனவருக்கு இப்படி நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது. இதனால் சந்தேகம் வலுக்கிறது. எனவே இந்த சந்தேகத்தின் விளக்குவது அரசின் கடமை, முதலமைச்சரின் கடமை. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரை விட்டு மறைமுகமாக இதுகுறித்து பேசுவது தலைமைக்கு அழகல்ல.

Sellur Raju:

 மதுரையில் ஏற்படும் தொடர் திருட்டு சம்பவம் குறித்த கேள்விக்கு., 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கூட்டணி கட்சிகள் எந்த கேள்வியும் கேட்காமல் வாயை வாடகைக்குவிட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற ஊழல் பட்டவர்த்தனமாக வெளியே தெரிகிறது. ஆனால் கூட்டணிக்கட்சிகள் கண்டுகொள்வதில்லை. தி.மு.க.,விற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் மக்கள் நாடாளுமன்றத்தில் பதில் கொடுப்பார்கள்.

நாடாளுமன்ற கூட்டணி தலைமை குறித்த கேள்விக்கு., 

மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் சொல்வது சரி தான். அதை தான் நாங்களும் சொல்கிறோம். தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரிக்கும் போது, சீட் பிரிக்கும் போது பிரச்னை வரும். அதைப் போல் எங்கள் கூட்டணியில் அதிமுக தான் தலைமை தாங்கும். அண்ணாமலையும் தலைமை தான் முடிவு செய்யும் என சொல்லியுள்ளார். தலைமை குறித்து அண்ணாமலை முரணாக சொல்லவில்லை. ஆளுநர் பிரச்னையில் தி.மு.க., ஆட்சி கலைக்கப்படலாம். தி.மு.க., ஆட்சி பல முறை கலைக்கப்பட்டுள்ளது. 

Sellur Raju:

அமித்ஷா தமிழர் பிரதமர் ஆவது குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு.,

தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொல்லியிருக்கலாம். தமிழர் பிரதமராக வருவதாக,  சொல்வது, கட்சியை வளர்க்க இப்படி சொல்லி இருக்கலாம். இதை அளவுகோலாக எடுக்க தேவையில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள். இன்று இருக்கும் கூட்டணி நாளை இருக்காது. எனவே கூட்டணியை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.

Sellur Raju:

 விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு ! 

அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?. ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.  யார் யாரோ  தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது?. அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.
அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு போட்டி திமுக தான். 
அதிமுக vs திமுக என்பது தான் தமிழ்நாட்டு அரசியல். இதிலிருந்து மாறுவதற்கு வழியே இல்லை. 
எத்தனையோ கட்சிகள் வரும் போகும். திமுக vs பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிசாமி விட மாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவார் என யாராவது நினைத்தார்களா? அவர் முதலமைச்சராக ஆவார் என எதிர்பார்த்தார்களா?. அவர் ஒரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தவர். அவருடைய உழைப்பால் உயர்ந்தார். அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் உயர்வார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Embed widget