காமராஜர் போட்ட விதையை எம்.ஜி.ஆர் மரமாக வளர்த்தார் - நாடார் மஹாஜன மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு !
”வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் சமுதாயத்திற்கும் இடம் உண்டு” - என நாடார் சங்க மாநாட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
மதுரை எஸ்.வி.என்., கல்லூரியில் 72-வது நாடார் மஹாஜன சங்க மாநாட்டில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில்..,” 72வது மாநில மாநாட்டில் சுருக்கமாக பேசினாலும் நறுக்கென்று பேசிய கரிகோல் ராஜ் எனது நண்பருக்கு வணக்கம். இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாடே இன்றைக்கு மதுரையை நோக்கி உள்ளது. 113 ஆண்டுகளாக நாடார் மக்களுக்காக நாடார் மஹாஜன சங்கம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தொழிற்பேட்டை வருவதற்கு அடித்தளம் இந்த நாடார் சங்கங்கள். பெருந்தலைவர் என்றால் அது காமராஜர் தான். ஊராட்சி தலைவர் என கூறியது அன்றைய அரசு. அந்த அரசு என்ன வென்று உங்களுக்கு தெரியும் (திமுக)., அதனை ஜெயலலிதா அவர்கள் மாற்றி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் என மற்றினார். நாடார் சமுதாயம் என்றால் அனைவருக்குமே நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவர் என்றால் காமராஜரை மட்டும் தான் குறிக்கும்.
பெருந்தலைவர் என்ற அனைவரையும் பயன்படுத்தும் முறையை நீக்க வேண்டும் என்று அம்மா தெரிவித்தார். கிராமத்தில் ஆரம்ப பள்ளி முதல் தொடக்க கல்வியை கொண்டு வந்தவர். எங்கள் சமுதாயம் போஸ்டர் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என கரிகோல் ராஜ் தெரிவித்தார். அது தவறு, இன்றைக்கு நாடார் சமுதாயம் நல்ல நிலைமையில் உள்ளனர். அதிமுக உங்களை அப்படி வைத்ததில்லை. இன்றைக்கு நாம் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம் என்றால் காமராஜரால் தான். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் பெரிய பெரிய அணைகள் மின் உற்பத்திகள் தொடங்கப்பட்டன. இவ்வளவும் செய்யப்பட்ட காரணத்தினால் தான் தமிழகம் ஏற்றம் பெற்று இருக்கிறது. நாடார் சமுதாயத்திற்கான அனைத்து மரியாதையும் அதிமுக தான் தந்து கொண்டிருக்கிறது.
நல்ல இணக்கமான கட்சி இருக்கிறது என்றால் அது அதிமுக தான். அதிமுக ஆட்சிக்காலத்தில் எல்லா சமூகத்தினரும் பாதுகாப்பாக வியாபாரம் செய்தார்கள். இன்று எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை வியாபாரிகளுக்கு அந்தளவுக்கு அச்சம் தற்போது உள்ள ஆட்சியில் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் விதையாக இட்டதை செடியாக வளர்த்தவர் எம்.ஜி.ஆர்., ஏழை எளிய மக்களுக்கு அற்புதமான கல்வியை கொடுத்தவர் தலைவி அம்மா. அம்மா கல்விக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு 100க்கு 50 பேர் உயர்நிலைப் படிப்பு படித்தார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் சமுதாயத்திற்கும் இடம் உண்டு. நாங்கள் வேட்பாளரை நிறுத்துகிறோம் வெற்றி பெறுவது உங்களுடைய கடமை. அழகாக கையை தட்டுகிறீர்கள் நாங்கள் வேட்பாளர் நிறுத்துகிறோம். நீங்கள் வெற்றியடைய செய்யுங்கள்" என தனது உரையை நிறைவு செய்தார்.