Palani: அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பழனி அடிவார மக்கள்: காரணம்?
நீதிமன்ற உத்தரவால் கடைகள் அகற்றப்பட்டதை எதிர்த்து 300க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் ஆதார் அட்டை ,வாக்காளர் அடையாள அட்டை ,ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்களை சமர்ப்பிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உட்பட்ட பழனி அடிவாரம், கிரிவலம் பாதை, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் அவதி அடைவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மணிப்பூரின் தீராத வடு.. விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?
இந்த வழக்கின் அடிப்படையில் கிரிவலப் பாதையில் எந்த விதமான ஆக்கிரமிப்பு கடைகளும், தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் எதுவும் இருக்கக் கூடாது உடனடியாக அகற்ற வேண்டும் கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்றை அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து முழுவதுமாக அகற்றப்பட்டு வந்தது.
அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன் எம்.பி., தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு - என்ன நடக்கிறது?
இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், கடை வியாபாரிகள், சிறு குறு வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் அதாவது முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் தினங்களுக்கு முன்பு ”என் மண் என் உரிமை” என்று சாலை யோர வியாபாரிகள் சார்பில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பட்டம் செய்தனர்.
ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் அங்கு கடை வைத்திருந்தவர்கள் குடியிருந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும் அவ்வப்போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் செய்து வருகின்றனர்.
Shocking Video: இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் சரசரவென கவிழ்ந்த வாகனங்கள் - அதிர்ச்சி வீடியோ
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், கடை வியாபாரிகள், சிறு குறு வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் தற்போது பழனி சாலையோர வியாபாரிகள் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.