மேலும் அறிய

அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன் எம்.பி., தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு - என்ன நடக்கிறது?

கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக சென்னையில் நிருபர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், வி.சி.க. நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம். மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் எந்த சக்தியுடனும் இணைவோம். மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். 

அதிமுகவிற்கு அழைப்பு:

கள்ளக்குறிச்சியில் வி.சி.க. மகளிரணி சார்பில் வரும் 2ம் தேதி நடைபெற உள்ள விசிக மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டியில், “மக்கள் பிரச்சினைகளுக்காக மதவாத, சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளுடனும் இணைவோம். மக்கள் பிரச்சினைகளுக்காக ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்த விருப்பம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வர வேண்டும். குடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மறுவாழ்வு அளிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

மது ஒழிப்பு மாநாட்டிற்கு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடில் உள்ள கட்சிகள் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. இது அரசியல் அல்ல. அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டும். சாதிய போதை மதுபோதையை விட மோசமானது. மத போதை போதைப்பொருளை விட மோசமானது. தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு. தேர்தல் அரசியல் என்பது வேறு. அ.தி.மு.க.வை இதைப்பற்றி சொல்கிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க.வின் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளது. அவர்களின் கூட்டணியிலே கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலைச் சந்தித்துள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க., - அ.தி.மு.க. என்ற போக்கே பல காலமாக நிலவி வரும் சூழலில், தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியிருப்பதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சிக்கும்  வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வரும் சூழலில் வரும் சட்டமன்ற தேர்தலில் படலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.விற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியில் பங்கேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vijay Ajith: நண்பன் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்.. கொண்டாடித் தீர்க்கும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்!
Vijay Ajith: நண்பன் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்.. கொண்டாடித் தீர்க்கும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்!
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்பெறும் ரயில் திட்டம்! சென்னை-புதுச்சேரி-கடலூர் புதிய பாதைக்கு வேகம்...!
8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்பெறும் ரயில் திட்டம்! சென்னை-புதுச்சேரி-கடலூர் புதிய பாதைக்கு வேகம்...!
ரயில் பயணிகளே உஷார்! செப்.3 முதல் 7 வரை ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! செப்.3 முதல் 7 வரை ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
Vijay Ajith: நண்பன் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்.. கொண்டாடித் தீர்க்கும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்!
Vijay Ajith: நண்பன் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்.. கொண்டாடித் தீர்க்கும் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்!
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
Embed widget