Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
Minister Moorthy Controversial Speech: நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும் என திமுக அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார்.
”இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மூர்த்தியின் பேச்சானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு:
திமுக கட்சியைச் சேர்ந்தவரும் பத்திர பதிவுத்துறை துறை அமைச்சருமான மூர்த்தி, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது, “ நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் 5,000 பேர், 10,000 பேர் இறந்துள்ளனர் என்பதன் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். அதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தெளிவுப்படுத்துகிறேன்.
நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுதந்திர போராட்டத்தில் முன் நின்றார்கள். அழகர் கோயில் உள்ளிட்ட இடங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து போரிட்டவர்கள் இந்த சமூகத்தினர். ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்துச் சென்றபோது, அவர்களுக்கு எதிராக போராட்டத்தில், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் இறந்த வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். தற்போது, 5 பேர் இறந்தால் கூட பெரிதாக பேசப்படுகிறது.
ஆண்ட பரம்பரை கருத்து:
பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன. இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் கொள்ள வேண்டும். படிப்பறிவில் பின் தங்கியதால், நமது வரலாறு மறைக்கப்பட்டது. தற்போது, அந்த நிலைமை மாறி வருகிறது என அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சரின் பேச்சானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பலரும் அமைச்சரின் கருத்துக்கு விமர்சனங்களை வைத்து வருகின்றன.
திமுகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக சாதி பாகுபாடு எதிர்ப்பு என இருக்கும் நிலையில், திமுக அமைச்சரின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
மேலும், அமைச்சர் பேச்சு தொடர்பான காணொளியானது சமூகம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read: TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!