(Source: ECI/ABP News/ABP Majha)
Madurai: திமுக அரசு போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த உசிலம்பட்டியில் அதிமுக போராட்டம்
அதிமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேஜ் அணிந்து கண்டன பதாதைகளை ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டியில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க., அரசு மீது குற்றம் சாட்டி அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.,வினர் போராட்டம்
தி.மு.க., அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க., அரசு மீது குற்றம்சாட்டி அ.தி.மு.க.,வினர் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனித சங்கிலி போராட்டம்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க., சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் இ.மகேந்திரன், பா.நீதிபதி, ஏ.கே.டி. ராஜா தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேஜ் அணிந்து கண்டன பதாதைகளை ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள்
உசிலம்பட்டி தேவர் சிலையிலிருந்து பேரையூர் சாலை வரை சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
மனித சங்கிலி போராட்டத்தில் அ.தி.மு.க.,வினர் கூறுகையில்
தி.மு.க., அரசு அமைந்த நாளில் இருந்து கடந்த 32 மாத காலமாக தமிழ் நாட்டில் போதைப் பொருட்களினுடைய புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எப்போதெல்லாம் சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார், போதைப் பொருள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியுள்ளார். அதே போல, சட்டமன்றத்திற்கு வெளியேயும், தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும், செய்தியாளர்கள் சந்திப்பிலும், அறிக்கைகளின் வாயிலாகவும் அவ்வப்போது நான் சுட்டிக் காட்டி உள்ளார். போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பினால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களுடைய வாழ்க்கை மிகப் பெரிய அளவிலே பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் மீண்டும் மீண்டும் நான் சுட்டிக்காட்டியுள்ளார். அப்படி இருந்தும் இந்த திமுக அரசு கண்டும் காணாமல், வாய்மூடி மவுனியாக இன்றுவரை இருந்துகொண்டு இருக்கிறதே ஒழிய, போதைப் பொருள் பழக்கத்தைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ADMK Protest: தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் அறிவிப்பு - போதைப்பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் கண்டனம்
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்!