மேலும் அறிய

வேடசந்தூர் அருகே ஸ்டுடியோ உரிமையாளர் எரித்துக் கொலையா ? - போலிசார் விசாரணை

முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் பாலசுப்பிரமணியை வழிமறித்து தாக்கிவிட்டு, அதன்பிறகு அவர் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நத்தப்பட்டியில், தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி (46). நிதி நிறுவன அதிபரான இவர் வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே ஸ்டூடியோ நடத்தி வந்தார். மேலும் அவர், அரிமா சங்க துணைத்தலைவராகவும் இருந்து வந்தார். பாலசுப்பிரமணிக்கு திருமணமாகி, புவனேஸ்வரி என்ற மனைவியும், கதிர்வேல் என்ற மகனும், சோனியாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பாலசுப்பிரமணி, வேடசந்தூரில் நடந்த அரிமா சங்க கூட்டத்தில் பங்கேற்க செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அங்கு கூட்டம் முடிந்தவுடன் அன்றைய தினம் நள்ளிரவு அவர் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான நத்தப்பட்டி நோக்கி வந்தார்.  ஆனால் இரவு வெகு நேரமாகியும் பாலசுப்பிரமணி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி, தனது உறவினர்கள், நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணி குறித்து கேட்டார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இதற்கிடையே டொக்குவீரன்பட்டியில் இருந்து நத்தப்பட்டி தோட்டத்திற்கு செல்லும் மண் சாலையில், தென்னம்பிள்ளை தோட்டம் என்ற இடத்தில் பாலசுப்பிரமணி தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் கிடந்தது.  இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த பாலசுப்பிரமணியின் மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  பின்னர் வேடசந்தூர்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  தடயவியல் அறிவியல் துறை உதவி இயக்குனர் ராஜேஷ் தலைமையிலான தடயவியல், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவு மற்றும் தடயங்களை சேகரித்தனர். 

வேடசந்தூர் அருகே ஸ்டுடியோ உரிமையாளர் எரித்துக் கொலையா ? - போலிசார் விசாரணை

மேலும் போலீஸ் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து பாலசுப்பிரமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கூம்பூர் போலீசார் பாலசுப்பிரமணி மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், எரிந்த நிலையில் கிடந்த பாலசுப்பிரமணியின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் மூடி திறந்த நிலையில் இருந்தது. மேலும் அருகில் ஒரு தீப்பெட்டியும் கிடந்தது. முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் பாலசுப்பிரமணியை வழிமறித்து தாக்கிவிட்டு, அதன்பிறகு அவர் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பாலசுப்பிரமணி, தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க்கை தானே திறந்து, அதில் தீயை பற்ற வைத்து தற்கொலை செய்துகொண்டாரா? என்ற சந்தேகத்தின்பேரிலும் விசாரணை நடக்கிறது என்றார். மோட்டார் சைக்கிளில் சென்ற நிதி நிறுவன அதிபர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget