புனித அந்தோணியார் கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
தாடிக்கொம்பு அடுத்து உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்து உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் 500 காளைகள் மற்றும் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதனை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மதுரைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனஅதிலும் பொங்கல் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் தேவாலயங்களிலும் நடத்தப்படும் ஆண்டு திருவிழாவையொட்டியும் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழமையான புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை! பணிச்சுமை காரணமா?
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும்,400 மாடு பிடிவீர்களும் பங்கேற்றுள்ளனர். மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட சுற்றும் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு 22 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
JEE Main 2023 : தொடங்கியது ஐ.ஐ.டி.யில் சேருவதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவு தேர்வு
அதேபோல் காளைகளை 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் காளைகளை முழுமையாக பரிசோதித்தனர் சீறி வரும் காளைகளை அடக்கும் வீரர்களை 25 பேர் கொண்ட குழுவாக பிரித்து மொத்தம் 15 குழுக்களாக பிரித்து போட்டியில் வீரர்கள் பங்கேற்க அனுமதித்துள்ளனர் கிராம மக்கள் ஒன்று கூடி நடத்தும் இந்த போட்டியில் எவரது பிடியிலும் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும், காளைகளின் திமிலை பிடித்து அடக்கும் வீரர்களுக்கும் கட்டில், அண்டா, டிவி, கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளனமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்மேலும் அவசர உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தீயணைப்பு வானங்களுடன் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.அதேபோல் இருபதுக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கால்நடைகளை பரிசோதனை செய்து போட்டிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.