மேலும் அறிய

தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை! பணிச்சுமை காரணமா?

விழுப்புரம்:  திண்டிவனத்தில் உதவி காவல் ஆய்வாளர் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: திண்டிவனத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, பணி சுமை காரணமா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் சேடன்குட்டை தெருவை சார்ந்தவர் நடராஜன் மகன் முருகன்(58), காவல் உதவி ஆய்வாளர். இவரது சொந்த ஊர் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமம் ஆகும். இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி ராணி(56), ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இரண்டாவது மனைவி மேகலா(49), இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் உதவி ஆய்வாளர் முருகன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது தாயார் உயிரிழந்ததால் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் 1987ல் உதவி ஆய்வாளராக காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவருடன் காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு பெற்று, உயர் அதிகாரிகளாக இருந்து வருகின்றனர். இவர் காவல் துறையில் நேர்மையாக பணியாற்றுவதால் உயர் அதிகாரிகள் பல்வேறு காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் மற்றும் பனிஷ்மென்ட் வழங்கி இன்கிரிமென்ட் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த உதவி ஆய்வாளர், சில மாதங்களாக சோர்வடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திண்டிவனம் சேடன்குட்டை தெருவில் உள்ள அவரது வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு, மேல் மாடியில் சென்று கதவை உள் பக்கம் தாழிட்டுக் கொண்டு, அறையில் இருந்த மின்விசிறியில் வேட்டியால் தூக்கிட்டு கொண்டார்.

இன்று அதிகாலையில் உதவி ஆய்வாளர் முருகனை காணவில்லை என மேல்மாடிக்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கம் தாழிட்டு உள்ளது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் வேட்டியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் பணி சுமை காரணமா?குடும்ப பிரச்சனை காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget