JEE Main 2023 : தொடங்கியது ஐ.ஐ.டி.யில் சேருவதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவு தேர்வு!
2023ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் அமர்வுத் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
JEE Main 2023 : 2023ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் அமர்வுத் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜே.இ.இ தேர்வு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. 2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) இன்று முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தரவரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க முயல வேண்டும். இரண்டாவது அமர்வுக்காக விண்ணப்பப் படிவங்கள் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளன. இதற்கிடையே முதல் அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்தனர். இந்த இணையதளம் மூலம் தேர்வில் பங்கேற்க சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
வழிமுறைகள்
ஜே.இ.இ.முதன்மை நுழைவுச் சீட்டில் மாணவர்களுக்கான பல முக்கியமான வழிமுறைகள் உள்ளன. அவர்கள் இந்த வழிகாட்டுதல்களை கவனமாக படித்து தேர்வு நாளில் பின்பற்ற வேண்டும்.
- தேர்வுக்கு வரும் மாணவர்கள் செருப்பு மட்டுமே அணிய வேண்டும். ஷூ போன்றவைகளை அணியக் கூடாது.
- தேர்வுக்கு வரும் மாணவர்கள் அரைக் கை சட்டைகள், சால்வார்களை மட்டுமே அணிய வேண்டும். டி ஷர்ட் அணிந்து வரக் கூடாது. பெரிய பொத்தான்களை கொண்ட ஆடைகள் அணிவருவதை தவிர்க்க வேண்டும். மாணவிகளை துப்பட்டா அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.
- தேர்வு மையங்களுக்குள் கைப்பைகள், மொபைல் போன்கள், தகவல் தொடர்பு/எலக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவை அனுமதிக்கப்படாது.
- தேர்வு நடைபெறும் இடத்திற்கு தொப்பி, துப்பட்டா, சன்கிளாஸ் போன்றவற்றை அணிய வேண்டாம். கடிகாரங்கள் உட்பட உலோகப் பொருட்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.
- JEE முதன்மை நுழைவு அட்டையில், தேர்வுக்கான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு மைய வாயில் மூடப்பட்டவுடன், எந்த ஒரு தேர்வரும், எந்த சூழ்நிலையிலும், உள்ளே நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை முடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்பது போன்று பல வழிமுறைகள் இருக்கிறது. அதனை பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.