திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.
![திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் dindigul: Students who wish to apply for the academic year 2022-23 may approach the Backward and Minority Welfare Officer TNN திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/03/459316ce205b5ea7108d5a9b59d900ed1670051779625193_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழக மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். அதேபோல் http://bcmbcmw.tn.gov.in/welfshemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந்தேதிக்குள்அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு 044-29515942 எனும் தொலைபேசி எண், tngovtitscholarship@gmail.com எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)