மேலும் அறிய
Advertisement
3வது மாடியிலிருந்து மாணவி கீழே விழுந்த வழக்கு - பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறுமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல் தனியார் பள்ளியின் 3வது மாடியிலிருந்து மாணவி கீழே விழுந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த அக்டோபர் 17ஆம் தேதி திண்டுக்கல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது.
இது தொடர்பாக பள்ளியின் தாளாளரை தொடர்பு கொண்ட போது மழை காரணமாக விடுதியின் தரை வழுக்கியதாகவும், அதனால் மாணவி கீழே விழுந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரில் மாணவி மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறுமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவிக்கு முறையான இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, திண்டுக்கல் தனியார் பள்ளியின் மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்ட மாணவிக்கு 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளி நிர்வாகம் தரப்பிலும் மாணவிக்கு 10 லட்ச ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மாணவியன் நிலை தற்போது எவ்வாறு உள்ளது என கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில், மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம் செட்டியார் மடை தேசிய நெடுஞ்சாலை உள்ள டாஸ்மார்க் மதுபான கடையை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் செட்டிய மடை சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் இருந்து பரமக்குடி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது இந்த கடையை சுற்றிலும் கோவில்கள் வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் இருந்ததால் நீதிமன்ற உத்தரவின் படி இந்த கடை இட மாற்றப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இதே இடத்தில் மதுபான கடை டாஸ்மார்க் நிர்வாகம் திறக்கப்பட்டு உள்ளது. இந்தப் பகுதியில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த பகுதியில் ஜாதிய மோதல்கள் அதிகமாக உள்ள பகுதி பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த கடையை மூட உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின்படி இட மாற்றப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion