மேலும் அறிய

ஐந்து தலைமுறைகள் கண்ட 106  வயது மூதாட்டியின் பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய உறவினர்கள்

27 பேரன் பேத்திகளும், 33 கொள்ளு பேரன் பேத்திகளும், ஐந்தாவது தலைமுறை வாரிசுகளாக 18 எள்ளு பேரன் பேத்திகளுமாக மொத்தம் 82 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

நத்தம் அருகே ஆரோக்கிய வாழ்வில் ஐந்து தலைமுறைகள் கண்ட மூதாட்டி தனது 106-வது பிறந்தநாளில் கேக் வெட்டி மகன், மகள்கள், மருமகள்கள், கொள்ளுப்பேரன், எள்ளு பேரன்களுக்கு ஆசி வழங்கிய அதிசய விழா நடைபெற்றது.

ஐந்து தலைமுறைகள் கண்ட 106  வயது மூதாட்டியின் பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய உறவினர்கள்

உணவே மருந்து என்பது மாறி மருந்தை உணவாக உட்கொள்ளும் அவசர யுகத்தில் மனிதனின் வாழ்வு நாள் சராசரி மிகவும் குறைந்துள்ளது. மன அழுத்தம், வேலைப்பளு, சின்ன சின்ன சண்டைகளைக் கூட தாங்க முடியாத அளவிற்கு பலவீனம் என இன்றைய தலைமுறையினர் இடையே ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதால் 100 வயது என்பதை நினைக்ககூட பார்க்க முடியாது. ஆனால் இதே காலகட்டத்தில் பல தலைமுறைகளை பார்க்கும் மூத்த குடிமக்கள் வாழ்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக வயது மூப்பு இருந்தும்  தள்ளாடும் வயதில் கூட 5  தலைமுறை சொந்தங்களை பார்த்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாடி வரும்  வயதானவர்களையும் பார்க்க முடிகிறது.

”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?

ஐந்து தலைமுறைகள் கண்ட 106  வயது மூதாட்டியின் பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய உறவினர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் வசிப்பவர் துரைசாமி மனைவி மூக்காயி (வயது 106). இவரது கணவர் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அவர் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மூக்காயி என்பவருக்கு 5 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் இருந்தனர். 3 மகன்கள் இறந்து விட்டனர். மகன், மகள்கள் வழியாக 27 பேரன் பேத்திகளும், 33 கொள்ளு பேரன் பேத்திகளும், ஐந்தாவது தலைமுறை வாரிசுகளாக 18 எள்ளு பேரன் பேத்திகளுமாக மொத்தம் 82 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறார். தமது 78 ஆவது வயதில் கணவரை இழந்த இவர் தினசரி உணவில் கீரை வகைகள், நாட்டு சுண்டைக்காய், பச்சை காய்கறிகள் உள்ளிட்டவற்றை மட்டுமே சாப்பிட்டு வருகிறார்.

Amaran: இந்தியிலும் மாஸ் காட்டிய SK! அஜய் தேவ்கன் படத்தையே ஆட்டம் காண வைத்த அமரன்!

ஐந்து தலைமுறைகள் கண்ட 106  வயது மூதாட்டியின் பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய உறவினர்கள்

இதுவரை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றதில்லை. 106 வயதை கடந்த மூதாட்டி வயது முதிர்வின் காரணமாக சிறிதளவு காது கேட்கும் குறைபாடு இருந்த போதிலும் நல்ல கண் பார்வை உடையவராக  திகழ்ந்து வருகிறார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த மூதாட்டியின் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளு பேரன் பேத்திகள் எள்ளு பேரன் பேத்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மூதாட்டிக்கு ஊட்டி மகிழ்ந்தனர். பின்னர் மூதாட்டியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். ஐந்து தலைமுறைகள் கண்ட மூதாட்டியின் பிறந்தநாளை தாங்கள் ஒரு திருமண விழா போல் கொண்டாடுவதாக பேரன் பேத்திகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Embed widget