"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
மூன்று ஆண்டுகளாக ஆளும் திமுகவிற்கு குடைச்சலை அண்ணாமலை கொடுத்து வந்தாலும், அண்ணாமலையை மீண்டும் மாநில தலைவராக்க கூடாது என பாஜக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்களாம்.
மூத்த தலைவர்களின் கோபம்
2021ம் ஆண்டு அண்ணாமலையின் கைகளுக்கு பாஜக மாநில தலைவர் பதவி வந்து சேர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளும் திமுகவிற்கு குடைச்சலை அண்ணாமலை கொடுத்து வந்தாலும் தேர்தல் களத்தில் அது பெரிய அளவில் எடுபடவில்லை. அதுவும் அண்ணாமலை வந்த பிறகு மூத்த தலைவர்கள் ஒதுக்குவதாக தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகன் உள்ளிட்டோர் ஆரம்பத்தில் இருந்தே கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழிசை அண்ணாமலைக்கு எதிரான கருத்துகளை சொல்லி வெளிப்படையாகவே காட்டி வந்தார்.
அண்ணாமலையின் பதவி முடிவடைந்தது.
இந்த நிலையில் தான் அண்ணாமலையின் தலைவர் பதவி கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனால் மீண்டும் அண்ணாமலையே தலைவராவாரா இல்லை வேறு யாருக்கும் தலைவர் பதவி வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இச்சூழலில் தான் மாநிலத் தலைவர் குறித்து கமலாலயத்தில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதில், கட்சியின் மேலிட பொறுப்பாளரான அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் நலின் குமார் கடீல், தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வி.பி.துரைசாமி, ஏ.பி.முருகானந்தம் என மூத்த தலைவர்கள் பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டார்களாம். அதில், மாநிலத் தலைவராக அண்ணாமலையை மீண்டும் கொண்டுவர நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்...' என சிலர் பேசியதாகவும், தமிழிசை செளந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அரவிந்த் மேனன் போன்றவர்கள் கோபமடைந்தனர்.
'கட்சியோட அடிமட்ட தேர்தலையே இன்னும் நாம் முழுவதுமாக நடத்தி முடிக்கவில்லை. அதுக்குள்ள மாநிலத் தலைவர் தேர்தலைப் பத்தி பேச தொடங்கிவிட்டடீர்களா... தலைமை யார் பெயரைச் சொல்கிறதோ, அவரையே மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போறோம். அதுக்குள்ள இங்க பிரச்சாரத்தை ஆரம்பிச்சுறாதீங்க..' எனக் கடுகடுத்தகாச் சொல்லப்படுகிறது.
அடுத்த மாநில தலைவர் யார்?
அமைதியாக இருந்த அண்ணாமலை, 'முதல்ல, மண்டல தலைவர் தேர்தலை நடத்தி முடிப்போம். யார், யாருக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என்பதை டெல்லி தலைமை பார்த்துக்கொள்ளும்' என்று பேசி கூட்டத்தை முடித்தாராம். ஆனால் தேசிய தலைமை அண்ணாமலைக்கு தான் பதவி கிடைப்பதற்கான
வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர். ஆனால் முன்புபோல டெல்லியில் செல்வாக்குடன் அண்ணாமலை இல்லை என்ற பேச்சும் இருக்கிறது. பிரதமராக மோடி பதவியேற்றபிறகு, ஒருமுறைகூட அவரை நேரில் சந்தித்து அண்ணாமலை பேசவில்லை. அண்ணாமலைக்கு நெருக்கமான தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்கூட, முன்புபோல அவருடன் நெருக்கமாக இல்லை என சொல்கின்றனர்.
அண்ணாமலைக்கும் டெல்லிக்கும் இடையே விழுந்த விரிசலை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் மாநிலத் தலைவராகக் தமிழிசை கடுமையாக முயற்சிப்பதாக சொல்கின்றனர். நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வினோஜ் பி.செல்வம், வானதி சீனிவாசன் போன்ற சீனியர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர்.