அரசு பேருந்தில் கியர் மாற்றும் கம்பியை பிடித்தப்படி பயணி பயணம் - நடந்தது என்ன..?
பெரும் அசாம்பவிதம் நடைபெறாத வண்ணம் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கியர் மாற்றும் கம்பியை பிடித்தப்படி பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
வத்தலக்குண்டு பகுதியில் இருந்து கொடைக்கானல் பண்ணைக்காடு கிராமத்திற்கு வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்தில் கியர் மாற்றும் ராடு கம்பி இணைப்பு கம்பியில் இருந்து விலகியதால், கியர் மாற்றும் கம்பியை பிடித்தப்படி பயணம் செய்த பயணியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மலைப்பகுதிக்கு தரமான பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு கிராமத்திற்கு நேற்று பிற்பகல் வேளையில் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சித்தரேவு பெரும்பாறை, தாண்டிக்குடி வழித்தடத்தில் பண்ணைக்காடு கிராமத்திற்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது. அப்போது வளைவு, நெளிவு கொண்ட மலைச்சாலையில் பேருந்தினை ஓட்டுனர் இயக்கி கொண்டிருந்த போது கியர் மாற்றும் ராடு கம்பி இணைப்பு கம்பியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது,
இதனை தொடர்ந்து பெரும் அசாம்பவிதம் நடைபெறாத வண்ணம் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கியர் மாற்றும் கம்பியை பிடித்தப்படி பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் அச்சத்துடன் பயணித்துள்ளனர்.
Lal Salaam Trailer: மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்.. வெளியானது லால் சலாம் படத்தின் ட்ரெய்லர்!
மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து, வத்தலக்குண்டு, திண்டுக்கல் அரசுப் போக்குவரத்து கழக மேலாளர்கள் கவனம் செலுத்தி விபத்துகள் ஏற்படாத வண்ணம் தரமான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.