ஏடிஎம்-ல் எடுக்கப்பட்ட பணம் கிழிந்த நோட்டுகளாக வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
ரூபாய் 3500 கிழிந்த நோட்டுகளாக வந்ததை கண்டு திருமூர்த்தி அதிர்ச்சடைந்துள்ளார். பணம் பெற்றதற்கான எஸ்எம்எஸ்-ம் வரவில்லை.
வேடசந்தூர் அருகே அய்யலூரில் தனியார் வங்கி ஏ.டி.எம் இல் எடுக்கப்பட்ட 4000 ரூபாய் பணம் அனைத்தும் கிழிந்த தாளாக வந்ததால் நூற்பாலை டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
விஜய் தொடங்கிய அரசியல் கட்சி - ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே உள்ள எத்தலப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் ராமசுப்ப. இவரது மகன் திருமூர்த்தி (வயது 31) இவர் வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலை வாகன டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவரின் அவசர தேவைக்காக அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் இல் ரூபாய் 4000 பணம் எடுத்துள்ளார்.
ரூபாய் நான்காயிரம் பணத்தில் ஏழு ஐநூறு ரூபாய் நோட்டுகள் (மொத்தம் 3500) பணம் கிழிந்த நோட்டில் டேப் ஒட்டி வந்துள்ளது. மீதி 500 ரூபாய் இரண்டு 200 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 100 ரூபாய் நோட்டுகள் கிழியாமல் நல்ல நோட்டுளாக வந்துள்ளது. ரூபாய் 3500 கிழிந்த நோட்டுகளாக வந்ததை கண்டு திருமூர்த்தி அதிர்ச்சடைந்துள்ளார். மேலும் பணம் பெற்றதற்கான எஸ்எம்எஸ்-ம் வரவில்லை இதனை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்பு பதினைந்து நிமிடங்கள் கழித்து நான்காயிரம் பணம் பெற்றதற்கான எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தான் சராசரி குடும்பத்தை சேர்ந்த பையன் என்றும் டிரைவர் வேலை செய்து பிழைத்து வருவதாகவும் அவசரத்திற்காக பணம் எடுக்க வந்து இவ்வாறு ஆனதாகவும் இதனால் தன் மனம் துன்புற்றதாகவும் கூறினார். வங்கி அதிகாரிகள் கவனக்குறைவால் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்