வேடசந்தூர் அருகே கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து - 4 பேர் படுகாயம்
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் நான்கு பேர் படுகாயம்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 46). வழக்கறிஞர். இவர் தனது மாமனாரான பொன்னம்பலம் (வயது 78) கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒரு காரில் தனது மாமனார் மற்றும் மாமியார் கீதா (வயது 66) ஆகியோருடன் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். காரை சாந்தப்பன் வயது 33 என்பவர் ஓட்டி வந்தார்.
கார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாரலபட்டி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக காரில் இருந்து சந்தோஷ் குமார் மற்றும் கீதா வெளியில் வந்து விட்டனர். முதியவர் பொன்னம்பலம் மற்றும் டிரைவர் சாந்தப்பன் காருக்குள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தீ மேலே கொளுந்து விட்டு எறிய தொடங்கியது.
இதனைப் பார்த்த அக்கம் பக்கம்தினர் காரின் இடிப்பாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை தீயையும் பொருட்படுத்தாமல் மீட்டு எடுத்தனர். இதில் பொன்னம்பலம் இடுப்பிற்கு கீழ் தீயில் எரிந்து இரண்டு கால்களும் கருகியது. டிரைவர் சாந்தப்பன் முழங்காலுக்கு கீழ்ப்பகுதி தீயில் கருகியது. அதன் பிறகாக கார் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் சேதமானது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
Crime: கடனை திருப்பிக்கேட்டால் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் - மிரட்டல் விடுத்த இருவர் கைது
வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்து ஆறு தனியார் ஆம்புலன்ஸ்களும் இரண்டு 108 ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்