மேலும் அறிய

திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே  பெரியூர்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவில் மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே  பெரியூர்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் உள்ளது. இக் கோயில் திருவிழா கடந்த 5 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து காப்புகட்டி விரதம் தொடங்கியது. இக்கோவில் திருவிழா நேற்று முன்தினம் 11ஆம் தேதி ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தையில் ராஜ்குமார் என்பவர்  தலைமையில் திருவிழா நடத்தப்பட்டது.

திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 96 கிராமங்களும், 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள்  தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கு வந்த முக்கியஸ்தர்களுக்கு நாயக்கர் இனபெண்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வைஆட்டம், கும்மியடி மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய விழாவான நேற்று மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு ராஜகம்பளத்தார் முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு பல்வேறு மந்தைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட சாமி மாடுகள் கோவில் முன்பாக அழைத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. 


திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

கோவிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்துகொம்பு எல்லைக்கு அனைத்து சாமி மாடுகளும் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து சாமி மாடுகள் மந்தைநாயக்கர் ஸ்ரீ மந்தையம்மன் கோவிலுக்கு ஓடிவந்து தரையில் போடப்பட்டு இருந்த வெள்ளை துணியை தாண்டும் நிகழ்வு நடந்தது. மூன்று முறை மாடுகள் மாலையை தாண்டியது. ஒவ்வொரு சாமி மாட்டுக்கும் எலுமிச்சை கனியை   தெய்வகனியாக பரிசாக வழங்கப்பட்டது.


திண்டுக்கல் : செந்துறை அருகே நடந்த மாடுகள் மாலை தாண்டும் வினோத போட்டி..!

கரடுமுரடான பாதையில் சாமி மாடுகளுடன் ராஜகம்பளத்து நாயக்கர் இன ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல், இரண்டாவது,  மூன்றாவாதாக வந்த சாமி மாடுகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. திருவிழாவிற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலர்களின்  தேர்தல் முடிவு தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி , நிலக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியகுழு கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் முடிவுகளில் திமுக வெற்றி பெற்றது.

அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

ABP Nadu Exclusive: ஓபிஎஸ்., கோட்டையில் நீக்கப்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்... தேனியை கூறு போட்டது அம்பலம்!

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Embed widget