மேலும் அறிய
மதுரையில் மன அழுத்தம் போக்குவது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம்
மதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

டி.ஜி.பி. - ஐ.ஜி
சைபர் கிரைம் குற்றங்கள், போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பதில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் , பொதுமக்கள் - காவல்துறை நட்புறவை பேணிக்காக்க வேண்டும் என அறிவுரை.
மதுரை சரகத்திற்கு உட்பட்ட மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.,) சங்கர்ஜிவால் தலைமையில் காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது குறித்தும், சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நேற்று கோவை டி.ஐ.ஜி., விஜயகுமார் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில் தமிழக காவல்துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க், மதுரை மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், டிஐஜி பொன்னி, மாவட்ட எஸ்பி சிவபிரசாத், விருதுநகர் எஸ்பி சீனிவாசபெருமாள் மற்றும் காவல்துறை உதவி மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது காவல்துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க வேண்டும் எனவும், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பொதுமக்கள் காவல்துறையினர் நட்புறவை பேணிக்காப்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தேவையான உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், அவ்வப்போது காவல்துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் , பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களை கட்டுப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை; மதுரையில் வீடு வீடாக சென்று கிளிகளை பறிமுதல் செய்த வனத்துறை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion