மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
BNS சட்ட பிரிவின் கீழ் முதன்முறையாக பசுமாடு கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு !
மதுரையில் கறவை பசுமாடு படுகொலை - BNS சட்ட பிரிவின் கீழ் முதன்முறையாக பசுமாடு கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்து புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை
மதுரையில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த கறவை பசுமாடு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பால் விற்பனை தொழிலில் விவசாயி
மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி (41) இவர் பால் கறவை மாடுகளை வளர்த்து அதன் மூலமாக பால் விற்பனை தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் 2 பசுமாடுகளை நேற்று முன்தினம் இரவு கட்டிவைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாடுகளை அவிழ்க்க சென்றுபார்த்தபோது ஒரு பசுமாடு மட்டும் நின்றுகொண்டிருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி தனது பசுமாடு காணாமல் போனதாக கூறி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடிப் பார்த்தபோது, வீட்டின் அருகே 200 மீட்டர் தொலைவில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் பசு மாட்டின் கழுத்தில் கயிறு மூலம் இறுக்கப்பட்டு இருந்ததும், கால் கட்டப்பட்டிருந்த தடம் இருந்த நிலையில், உடல் முழுவதிலும் அடித்தது போன்ற காயம் இருப்பது தெரியவந்துள்ளது.
பசுமாடு உயிரிழப்பு தொடர்பாக வழக்கு
இதனை பார்த்து உரிமையாளர் கதறி அழுத நிலையில் மாடு கட்டப்பட்டிருந்த கயிறும் காணாமல் போனதாக சந்தேகமடைந்த முருகேஸ்வரி பசுமாடு உயிரிழந்ததாக, புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் பசுமாட்டின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். இதனையடுத்து புதூர் காவல்துறையினர் விலங்குகளை கொன்று, ஊனம் நஞ்சு அல்லது பயனற்றவாறு செய்து சொத்தழிப்பு செய்தல் பிரிவான பாரத் நியாய சங்ஹிதா (BNS) சட்ட பிரிவான 325ன் கீழ் பசுமாடு உயிரிழப்பு தொடர்பாக முதன்முறையாக கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த கறவை பசுமாடு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Rain: அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழை; மக்களே முன்னெச்சரிக்கை..!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aadi Festival 2024: ஆடி முதல் வெள்ளி... 301 கிலோ மஞ்சள், 51 அம்மியில் மஞ்சள் அரைத்து காரைக்குடி பக்தைகள் வழிபாடு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion