TN Rain: அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழை; மக்களே முன்னெச்சரிக்கை..!
TN Rain: தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணிவரை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 மாவட்டங்களில் மழை:
இந்நிலையில், இன்றைய வானிலை அறிவிப்பு குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, இன்றைய நாள் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 19, 2024
வானிலை அறிக்கை:
இதையடுத்து, வானிலை குறித்து விரிவாக வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (19.07.2024) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழை:
தமிழகத்தில் இன்று (19.07.2024) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,தேனி, திருப்பூர்,கோவை, ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை அறிக்கையின் விவரம்:
20.09.2024 - 24.07.2024:
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கலாம்.
அடுத்த 48 மணி நேரத்திற்ற வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 -35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.