மேலும் அறிய

மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பால் உயிரழப்புகள் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 93 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது  வரை நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 160க்கு மேல் அதிகரித்துள்ளது.

மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 257 ஆக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களில் முந்தைய வாரத்தில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் இருந்தது. தமிழ்நாட்டில் மே 12 முதல் 19 ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32-லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் கேரள மாநிலத்தில் 95 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கேரள மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் பலி எண்ணிக்கையுடன் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு குறித்து இருவருக்கும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் 14 வயது சிறுவன் ஒருவர் நெஃப்ரோடிக் நோய்க்குறி காரணமாக சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த 54 வயது நபர் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு உயிரிழப்புகளும் கோவிட்-19 உடன் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் அதிக ஆபத்தை உணர்த்தியுள்ளன. இதனிடையே புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வருவதாக கூறப்படுகிறது.

மீண்டும் வீரியமெடுக்கிறதா கொரோனா? - கேரளாவில் ஒருவர் பலி, தமிழகத்தில் நிலை என்ன?

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கவலைப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டுதான் கொரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமைய தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவிதுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget