இன்று மதுரையில் 30 பேருக்கும் , சிவகங்கையில் 12 பேருக்கும் கொரோனா தொற்று..
மதுரை , தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று மதுரை மாவட்டத்தில் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 30 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74716-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 19 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73240-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1166 இருக்கிறது. இந்நிலையில் 310 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 12 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19901-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 20 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 19523-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 202-ஆக இருக்கிறது. இந்நிலையில் 175 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32849-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32078-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 638 இருக்கிறது. இந்நிலையில் 133 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 7 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43450ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42844-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 517 இருக்கிறது. இந்நிலையில் 89 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சடலம் போல் மிதந்த போதை ஆசாமியால் பரபரப்பு...!