மேலும் அறிய
Advertisement
OPS : தேவர் தங்கக்கவச விவகாரம் : முன்னாள் எம்.பி. தலைமையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மனு..!
ஓ.பி.எஸ். தரப்பினர் சார்பில் பேங்க் ஆஃப் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் வழங்கக் கோரி முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் மனு.
ஓபிஎஸ் தரப்பின் சார்பில் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் 100 மேற்பட்டோருடன் ஓ.பி.எஸ் ஆதரவு அ.தி.மு.க.,வினர் அண்ணாநகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேவர் திருமகனாரின் 14 கிலோ தங்க கவசத்தை பெறுவதற்கான மனுவை வங்கி முதுநிலை மேலாளர் ரேனு குப்தாவிடம் வழங்கினர். பின் நிருபர்களைச் சந்தித்த முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் எங்கள் தரப்பின் சார்பில் வழக்கம் போல ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கையெழுத்திட்டு தேவரின் தங்க கவசத்தை பெறுவதற்கான கோப்புகளை வங்கி அதிகாரியிடம் வழங்கினோம்.
ஓ.பி.எஸ். தரப்பினர் சார்பில் பேங்க் ஆஃப் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் வழங்கக் கோரி முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் மனு கொடுத்தனர்.@OfficeOfOPS | @thangamagan_ops | @OPRavindhranath | @mgunamuthuops | @OPSARMY84077456 #thevar| #Madurai | @abpnadu pic.twitter.com/AIh6v75oYU
— arunchinna (@arunreporter92) October 3, 2022
வங்கி அதிகாரிகள் எதிர் தரப்பில் இருந்தும் கவசம் பெற கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இரண்டையும் பரிசீலித்து முடிவை எடுப்பார்கள் என கூறியுள்ளார். தர்மர் இதனை கையில் எடுத்து உள்ளார். தர்மம் வெல்லும் எப்போதும் போல ஓ.பன்னீர்செல்வம் தெய்வத்திருமகனார் தேவரின் தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து பெற்று வழங்குவார் என கூறினார். இதில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன், எம்.பி தர்மர், முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆயுத பூஜை முன்னிட்டு வியாபாரம் அமர்க்களம்; மதுரையில் மல்லி பூ விலை ரூ.1200 ஐ தொட்டது !
கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பின் சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் தேவரின் தங்க கவசத்தை பெறுவதற்கான மனுக்கள் வழங்கப்பட்டது. இன்று ஓ.பி.எஸ்., தரப்பு சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது. வருகின்ற 24-ஆம் தேதி தான் யார் தரப்பிற்கு ஆவணங்களில் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் தேவரின் தங்க கவசத்தை அளிக்கிறார்கள் என்பது தெரியவரும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion